உலகின் முதல் மூன்று சிறந்த கப்பல் கட்டும் நிறுவனங்கள் கொரியர்களுடையது. சாம்சுங், தேவு, ஹுயுந்தே!
Photo by N.Kannan

2 comments:

  Badri Seshadri

9:47 pm

கண்ணன்: இது 'ஹுயுந்தே' வார்த்தை தொடர்பான பின்னூட்டம்.

நீங்கள் தினமணியில் எழுதிய கட்டுரையில் இந்தப் பெயரை மீண்டும் இந்திய உச்சரிப்பான 'ஹுயுண்டாய்' என்று மாற்றிவிட்டதாக எழுதியிருந்தீர்கள்.

தமிழ்நாட்டில் தமிழிலும் பலகை வைத்திருக்கும் இந்த கார் கம்பெனியின் விற்பனை நிலையம் ஒன்றில் 'யுண்டாய்' என்று எழுதியுள்ளது. ஏன்?

  Dr.N.Kannan

10:05 pm

பத்ரி மிக நல்ல கேள்வி! ஆசிய கலாச்சாரத்திற்கே உரிய பண்பாட்டுச் சகிப்புதான் இதற்குக் காரணம். எத்தனை நாள் நாம் மெறாஸ், டிரிவாண்றம், பம்பாய் என்பதை பொறுத்துக் கொண்டு இருந்தோம். உலகின் வல்லரசுகளான அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட தமது மொழி உச்சரிப்பை அழுந்தச் சொல்ல முடியாத ஒரு உலகமல்லவோ இது.

நான் இப்படித் திரும்பத்திரும்ப எழுதுவதற்குக் காரணம், தமிழனால் உச்சரிக்கமுடியாதது என்று ஏதுமில்லை. உண்மையான கொரிய உச்சரிப்பு நமக்கு அவ்வளவு அன்னியமல்ல. ஏன் வெள்ளைக்காரன் போல் ஹுண்டாய் என்று சொல்ல வேண்டும்? ஆங்கிலத்தில், 'த' உச்சரிப்பு துலங்க இருப்பதில்லை. 'ட' ஒலிதான் அங்கு பிரதானமாக உள்ளது.

(பத்ரி, உங்க குட்டிப்படம் அழகா இருக்கு :-)