குச்சி கொண்டு கேக் வெட்டி...


கலாச்சாரங்கள் கை கோர்க்கும் போது சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது இப்படியானதொரு விபத்து. இப்போது உலகெங்கும் இது பரவிவிட்டது. ஆனால் 'தொட்டில் பழக்கம்' என்று சில பழக்கங்கள் நாட்டுக்கு நாடு இருக்கின்றன. நாம் கையால் சாப்பிடுவது, கிழக்காசியாவில் குச்சி கொண்டு சாப்பிடுவது இப்படி. கொரியாவில் கேக்கை இப்படிக் குத்திக்கொதறி சாப்பிடுவது, ஜெர்மனியில் வாழ்ந்துவிட்ட எனக்கு பரிதாபமாகப்படும்! முதன் முதலாக வெள்ளைக்காரர் சாப்பாட்டு வழக்கம் கொரியா வந்து போது கொரியக்கிழங்கள் 'இது என்ன ஆயுதங்களை வைத்துச் சாப்பிடுவது?' என்று அங்காலாய்த்தார்களாம்! சரிதானே!!