கோலாக் காதல்


கோலாக் கரடி, கரடியே இல்லை :-) எவ்வளவு அன்பு பாருங்கள். ஒரு முறை பெர்லின் விலங்காட்சியகத்தில் ஒரு சிம்பான்சி என்னை முத்தமிட்டுவிட்டது. அதுவொரு பெண் குரங்கு. ஆக, காதலுக்கு கண்ணில்லை :-))
Photo by N.Kannan

ஈருடல் ஓருயிர்


ஈருடல் ஓருயிர் என்று கவித்துவமாக நாம் பேசுவதுண்டு. ஆனால், ஆஸ்திரேலிய நீலமலையில் இரண்டு வெவ்வேறு இன மரங்கள் தற்செயலாக ஒன்றுடன் ஒட்டி உறவாட, பின் பிரியமுடியாதபடி இரு உடல் ஒரு உயிர் என்று கலந்துவிட்ட காட்சி.
Photo by N.Kannan

மரத்திலொரு சோளப்பயிர்!


இதைப்பார்த்தவுடன் சோளப்பயிர்தானே ஞாபகத்திற்கு வருகிறது. கூர்ந்து பாருங்கள் இயற்கையின் விந்தையை! இது கூம்பு மரம். ஆஸ்திரேலிய 'கடம்ப வனத்திலுள்ளது'. இயற்கை பல நேரங்களில் ஒரே template வைத்துக்கொண்டு பல இடங்களில் பதிப்பிப்பதுண்டு.

மாராப்பு விற்கும் ஆண்!


சோல் நகரத்து வணிகர்கள் 'பிரா' (மாராப்பு) விற்கும் திறன்!! (என்ன இது வெறும் ஆண்களுக்கான போட்டாவா போச்சு :-)

சிப்பாய் சிரிப்பதில்லை!


இங்கிலாந்து கோட்டையில் மட்டுமில்லை, கொரியக்கோட்டைகளிலும் சிப்பாய் சிரிப்பதில்லை! ஹி..ஹி..

ஆண்கள் மட்டும்!


அனுமதிக்கப்பட்ட ஆண்களுக்கான சுகங்களில் ஒண்ணுக்கடித்தலும் ஒன்று. ஏறக்குறைய 800மீ உயரத்திலிருந்து, சோல் கோபுரத்திலிருந்து...ஹி..ஹி..