கடற்கரை!

விண்ணின் மாட்சி

கடல்மஞ்சு


இன்று கடலிலிருந்து நீர்ப்புகை (மேகத்தில் ஒரு வகை)மேலே கிளம்பி மலையைத்தொட்டது!

பற்றுக!


ஓடத்தை தரையுடன் இணைக்கக் கட்டும் கயிறு நீரில் விழுந்தவுடன் பற்றிக் கொண்டு வளர்கின்றன சிப்பிகள். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்பது போல் பற்றுதல் வாழ்விற்கு இன்றியமையாதது ஆகிறது!

வனப்பு


காதல் செய்வதற்கு கவர்ச்சி ஒரு காரணி. பூத்துக்குலுங்கும் அழகு!

பிள்ளைத்தாச்சி


பிள்ளைத்தாச்சி என்றவுடன் மானுடப் பெண்தான் நினைவிற்கு வர வேண்டுமா? இவளும் வளைந்து, வயிறு தள்ளி, வனப்புடன்தானே இருக்கிறாள்?

சில்லென்று ஒரு சிலிர்ப்பு


தோகை விரித்து ஆடும் மயில் அவ்வப்போது சிலிர்த்துக்கொள்ளும், இது போல்!

தோற்றப்பிழை


நீர்த்துளி போல் தோற்றமளிக்கும் நோய்க்கட்டிகள்!

தளிர்

மலருக்கு மாலை!


மலர்தான் மாலையாக வேண்டுமா? மலருக்கும் மாலையுண்டு!

விதை கண்ட பின் வீழும் மலர்


குனிந்த நிலையில் அல்ல மலர், கூர்ந்து கவனித்தால் இதழ்கள் மெல்லக் கீழே வீழ்ந்தல் காணலாம். கருவுற்ற நிலையில் ஆடம்பரங்களைக் களைகிறது மலர்!

வலையனின் வலை!



வலையன் வலை விரித்தான் இறால், நண்டு பிடிக்க. வலைக்குள் உயிர் வதை என்றாலும் வலைமேல் ஆயிரம் உயிர்கள் அண்டி வளர்ந்தன!

எண்வரம்பின் அறியா யாக்கை!

இரவில் படகுத்துறை



இரவில் படமெடுப்பது ஒரு கலை. கேமிராவை மிகுவிழிக்கச் செய்து, ஒளிசேரும் இடத்தை மிகுபதப்படுத்தி எடுக்க வேண்டும். கை நடுங்குதல் கூடாது. இப்படிப் பல நிபந்தனைகள். எல்லாம் கூடி வந்தால் ஒரு கவிதை கண் முன் நிற்கும்!

புயல் வரும் பின்னே! கப்பல் வரும் முன்னே!



கொரியாவை புயல் கடக்குமென்று தெரிந்தால் பல கப்பல்கள் எங்கள் ஆய்வகத் துறைக்கு வந்துவிடும்!

தியான்மு புயல் (2)



நல்ல வேளையாக புயற்சேதம் இங்கில்லை!

மாலை வானும், கடலும்



விண்ணும் மண்ணும் ஒன்றையொன்று ரசித்துக் கொண்டிருக்கும் மாலை!

கப்பல் மூழ்குகிறதா? (படம் 1)

கப்பல் மூழ்குகிறதா? (படம் 2)



ஓ! இல்லை இல்லை! இரண்டு கப்பல்கள் அருகருகே! சின்னக்கப்பல் பெரிய கப்பலுக்கு ஒத்தாசை இயைவு.

செம்மொழியான தமிழ் மொழியாம்!



வீடியோ பார்த்தவுடன்தான் ஏ.ஆர்.ரகுமான் ஹாலிவுட் பாணியில் தயார் செய்திருப்பது புரிகிறது. இம்மாதிரியான இசை முயற்சிக்கு முதல் வித்து We are the world எனும் 1985ம் ஆண்டு ஆல்பம். அதில் 21 கலைஞர்கள் பாடி உலக சரித்திரம் படைத்தார்கள். ரகுமான் நமது தேசியகீதத்தை இம்மாதிரி அமைத்தார். இப்போது அதே பாணியில் தமிழ் மொழிப்பாடலை அமைத்துள்ளார்.

ஆரம்பமே மதுரை மீனாட்சி என்பதால் இது சூப்பர் ஹிட்தான் (மதுரைப்பாசம் போகுமா?)

அடுத்து, ”ஆதிபகவன் உலகு” என்ற இறை வாழ்த்து! இனி யாரும் குறை சொல்ல வழியில்லை :-)

புத்தஜெயந்தி 2010



தென்கொரியாவின் தலைநகரான சோல் (Seoul) புத்தர் கோயிலில் ஆயிரக்கணக்கான தாமரை விளக்குகள் ஏற்றி ஆயிரக் கணக்கானோர் சென்ற வெள்ளியன்று (21.05.10) வழிபட்டனர். அப்போது செல்பேசி கொண்டு எடுக்கப்பட்ட படம்.

செம்மொழி மாநாடும் உமர்தம்பியும்!



தன்னலமற்ற தமிழ்ச்சேவை செய்த திரு.உமர்தம்பிக்கு உரிய அங்கீகாரம் தமிழ்ச் செம்மொழி நாட்டில் கிடைக்குமா என்பது குறித்தான உரைச்சித்திரம்.

மரம்



மரங்கள் இயற்கையின் அற்புத வடிவங்கள். மரங்கள் இல்லையெனில் மண்ணில் மழையில்லை. சுத்தமான காற்று இல்லை. புத்தர் காலத்தில் தோன்றிய மரங்களெல்லாம் இன்றும் வாழ்கின்றன. மரங்களை நோக்கும் போது மனிதன் மிகச்சிறியவன். ஆனால், அவன் நினைத்தால் ஒரு காட்டையே அழித்துவிடமுடிகிறது. எனவே மனிதர்கள் தங்கள் பொறுப்பறிந்து பிற உயிர்களிடம் அன்பு செய்து வாழ வேண்டும். கொரியா தன் நாட்டு பழம் மரங்களுக்காக தபால்தலை வெளியிட்டுள்ளது. நம்மாழ்வார் ஒரு பாடலில் இறைவனையே

வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர

என்றழைக்கிறார். நாமும் நம் மரங்களை அன்புடன் நேசிப்போமாக!

ஜோதி




தன்னொளி குறையாமல் மற்றொன்றை உயர்த்தும் விளக்கு!

மகரந்தக் கோலம்



ஊசியிலை மரங்கள் வீசும் மகரந்தம், வரைகின்றன நீர்க்கோலங்கள்!

பனியின் ஜாலம் (7)

கடலில் மிதக்கும் படகு கரையேறி பனியில் மூழ்கிக்கிடக்கிறது!

பனியின் ஜாலம் (6)

பனியின் கனம் கூடினால் படகும் கவிழும்!

பனியின் ஜாலம் (5)

கடலாய்வில் துணை போகும் உபகரணங்கள் பனி செய்து காட்சிப்பொருளாய்!

பனியின் ஜாலம் (4)

கரையில் ஒதுங்கிய குப்பை கூளம் கூட (marine debris) பனியின் கைவண்ணத்தில் காட்சிப்பொருளாகிறது!

பனியின் ஜாலம் (3)

வண்ணத்தில் காலைத் தோய்த்து வரையும் ஒரு கலையுண்டு. ஆனால் இங்கு வெறும் சுவடுகள் கூட பனிப்பதமாக ஓவியமாகிறது!

பனியின் ஜாலம் (2)

ஓவியம் வரையப் படுதா வேண்டும், ஆனால் இங்கு படுதாவே ஓவியம் போல் (modern art) காட்சியளிப்பதை ரசியுங்கள். எல்லாம் பனி செய்யும் ஜாலம்!

பனியின் ஜாலம் (1)

துளித்துளியாய் பனி மண்ணை மூடும் போது பெரிய கிராபிக் எபெக்ட் (Graphic effect)எல்லாம் கொடுக்கிறது. பனிமூடிய படிக்கட்டு இது. நம்பமுடிகிறதா?

கொரியக் கடலாய்வு மையம் (குறும்படம்) - KORDI



Click here to view video (படம் பார்க்க இங்கே சொடுக்கவும்)

குளுரில் நடுங்கும் நகரங்கள்

புறவெளி குளிர்ந்துவிடும் போது, கட்டிடத்தின் சூடு கூட ஆவியாய் தெரிகிறது. சோல் (தென் கொரியா) நகரம். ஜனவரி 2010



நன்றி. The Korea Herald (2010-1-8)

செத்தவரை பாறை ஓவியம்

செத்தவரை பாறை ஓவியம். விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் வேட்டவலத்திலிருந்து திரும்பி செத்தவரை செல்ல வேண்டும்.உயரமான மலையில் ஏற வேண்டும். கீழ்வாலை ஓவியங்கள் காவி வண்ணத்தில் உயரமற்ற பாறைகளில்.இது வெண்ணிறம்.மானைப் பாருங்கள் :பிற உருவங்களும் உண்டு.

படம்: முனைவர் டேவிட் பிரபாகர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி



தமிழ் மரபின் ஆகப்பழமையான ஓவிய வடிவங்களைக்காண: முதுசொம் காலரி

ஜம்பைக் கல்வெட்டு:திருக்கோவிலூர்

புகழ் பெற்ற ஜம்பைக் கல்வெட்டு.திருக்கோவிலூர்(திருவண்ணாமலையிலிருந்து போகலாம்).தென் பெண்ணைக் கரையில் உள்ள ஊர்.ஏரியில் தண்ணீர் இருந்தால் கரை மீது நடந்து சுற்றி வரவேண்டும்.படத்தில் எங்கள் கல்லூரி மாணவர்கள் -ஆசிரியர்கள்.

ஸத்புதோ எனத் தொடங்கும் ஒரு வரி பிராமி கல்வெட்டு பின்னால் தெரிகிறது.அசோகனது கல்வெட்டில்'சத்யபுத்ர ' எனக்குறிக்கப்படும் மன்னர் அதியமான்களாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். இக் கல்வெட்டு அதனை மெய்ப்பித்துவிட்டது.

சத்யபுத்ர =அதியமான் எப்படி?
சத்ய - அத்ய (மொழி முதல் சகரம் கெடல், எ-கா: சமணர்-அமணர்.சுப்பு -உப்பு, சிறகு-இறகு)புத்ர - மகன்மகன் - மான் (இடையிலே நின்ற ககரம் கெட்டு உயிர் நீண்டது. (எ-கா: பகுதி=பாதி, மிகுதி =மீதி, பகல் =பால்)

படம்: முனைவர் டேவிட் பிரபாகர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி.



தமிழ் எழுத்து வளர்ச்சி, பரிணாமம் குறித்து மேலுமறிய: தமிழ் மரபு அறக்கட்டளை

ஆழ்கடல் அனலடுப்புகள்

Hydrothermal Vents on Earth

கருங்குழி - குறும்படம்

மண்ணின் மொழி

புழக்கடையில் எண்ணைக்கசிவு

காலையில் வேலைக்கு வந்தவுடன் சகா மோப்பம் பிடித்துக்கொண்டிருந்தான்! எங்கே மண்ணெண்ணெய் வாசனியென்று. பின்னால்தான் தெரிந்தது, வளைகுடாவில் யாரோ இரவில் டீசலைக் கொட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்று. மீதம் வீடியோவில்...

சினிமா காட்டும் கேமிரா

தொழில்நுட்பம் போகும் வேகம், திசை ஆச்சர்யமாகவே உள்ளது. முதலில் pinhole camera, பின் film camera, பின் digital camera, பின் camera with video function, இப்போது திரையில் படம் காட்டும் கேமிரா! Science fiction என்பது மெல்ல மெல்ல நிகழ்வாகும் விந்தை. இன்னும் சில காலங்களில் hologram ல் வீடியோ காட்டலாம். அதிக தூரமில்லை!

கிம்சி முகவுரை!

பன்றிக்காய்ச்சல் கூட பேஷனாகிவிட்டது. கிம்சி என்பது கொரியர்களின் ஊறுகாய். இதை உண்பதால் பன்றிக்காய்ச்சல் போகும் எனச் சொல்லும் விளம்பரம்! எவ்வளவுதூரம் உண்மை?



செய்தி மூலம்: கொரியன் ஹெரால்ட்

காய்ச்சல்!!

பன்றிக்காய்ச்சல் கொரியாவில் மூன்று பேரைத்தான் இதுவரை கொன்றிருக்கிறது. அதற்குள் ஏகப்பட்ட கெடுபிடி. பொது இடங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்படுகிறது. இருமல், காய்ச்சல் இருந்தால் முகமூடிதான். இங்கு அலுவலக அழகிகள் தற்காப்பு கவசம் அணிந்து வேலை செய்வதைக் கவனிக்க!

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு

ஆச்சர்யமான வகையில் ஆகஸ்டு 15ம் நாள் கொரியாவின் விடுதலை (liberation day) ஆகும். ஜப்பானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட நாள்! எனவே இந்திய-கொரிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

7வயது காரோட்டி!

எல்லாக் குழந்தைகளுக்கும் காரோட்டப் பிடிக்கும்! நான் வளர்ந்த காலத்தில் குதிரைச் சவாரி பெரிதாகப்பட்டது. எல்லாம் எம்.ஜி.ஆர் எபெக்ட் :-) புகுமுகவகுப்பு (PUC) படிக்கும் போதுதான் கார் ஓட்டுவது எப்படி? என்று அறிந்து கொண்டேன்..ம்ம்..வெறும் பாடம்தான். ஏட்டுச்சுரைக்காய்! வேலை கிடைத்து ஜெர்மனி போன போதுதான் சொந்தத்தில் கார் வாங்கி ஓட்டினேன். ஆனால் ஒரு அமெரிக்கச் சிறுவன் ஏழு வயதில் கார் ஓட்டி காவலரை திகைக்க வைத்திருக்கிறான். வீட்டுக்கு ஓட்டி வந்து விட்டு, பயந்தடித்து ஓடும் காட்சி அற்புதம்!

Video Courtesy of KSL.com

புவியன்பு செய்க!

மண்ணோவியம்!



மலாய்காரர் பாடும் தமிழ்ப்பாட்டு -2

மலாய்காரர் பாடும் தமிழ்ப்பாட்டு -1

நீ! எனும் அற்புதம்!!

ஒரு நிமிட மாற்றம்!!

இ-மாசு (சூழல் காலனித்துவம்)

மூன்றாம் உலகநாடுகள் முதல் உலகநாடுகளின் குப்பை மேடாக மாறிவருகின்றன. அமெரிக்கா பசுமையுறலாம். ஆனால், அழிவது இந்தியாவோ, சீனாவோ? என்றால் அது என்ன நியாயம். மக்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களூரில் என்ன நடக்கிறது என்று கண்காணியுங்கள்!!


Watch CBS Videos Online

மொட்டை அழகு

எனக்கு இந்த மொட்டை மீது ஆர்வமும், பயமும் உண்டு. முடியைக் கொடுப்பது என்பது நமது ஈகோவைக் கொடுப்பதற்கு ஒப்பு, அதனால் பயம். ஆனால், மொட்டையில் ஒரு அழகு இருக்கு. அதனால் ஒரு கவர்ச்சி. புத்த ஜெயந்தி ஏற்பாடுகளில் ஒன்றாக கொரியக் குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஒரு வழக்கம். அது குழந்தைகள் மத்தியில் எவ்வளவு ஆர்வத்தை உருவாக்குகிறது பாருங்கள்.

கொரியப்பாடல்-சிறுமியின் திறமை!

காதலுக்காகக் கண்

தமிழகத்தைத்தவிர வேறு எங்கிலும் சிறு, சிறு சினிமா என்பது வழக்கில் உள்ளது. சின்னதாக ஒரு கருபொருள் கொண்டு, அழகிய பாடலுடன் எடுப்பது. நம் சினிமாவில் பாடல் காட்சிகள் மிகத்திறமையாக எடுக்கப்படுவது உண்மைதான். ஆயினும் சினிமாக்காரர்கள் சினிமா தவிர வேறு ஊடகங்களில் (கொஞ்சம் டி.வி, அதுவும் மவுசு போன பின்னே!) நடிப்பதில்லை. கீழேயுள்ள திரைப்படம் பிரபல கொரிய நடிகர் நடித்திருக்கும் குறும்படம். எவ்வளவு அழகான பாடல், காட்சியமைப்பு. இது போன்ற கரு விஜய்யின் ஒரு படத்தில் வரும் (சிம்ரன்). ஆயினும், இக்குறும்படத்தில் உள்ளது போல் காதலுக்காக கண் கொடுப்பதில்லை.


வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

இந்தியாவில் இது இன்னும் பிரபலமாகவில்லை, ஆனால் வெளிநாடுகளில் Treadmill எனப்படும் ஓடு கருவி உடற்பயிற்சி சாதனமாக மிகப்பிரபலம். அதை வைத்து ஒரு நடனம் (choreography) செய்யமுடியும்? எனக் காட்டியிருப்பது திறமை. பிரபு தேவா/லாரன்ஸ் பார்த்தால் இன்னும் சிறப்பாக இவ்வகையான நடனத்தை மெருகேற்றுவார்கள்.

கழிப்பும் கலையே

அன்றாட உபயோகத்திலுள்ள பல பொருட்கள் கழிக்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. பழைய சைக்கிள், பழைய டயர், ஓட்டை உடைசலென்று. இவைகளைப் பொறுக்கி கலையாக்கும் திறன் வல்லவனுக்கு உண்டு. இங்கு சைக்கிள் ஹாண்ட் பார் கொண்டும், ஃபோர்க் முதலியவை (கொண்டைப்பூ) பீனிக்ஸ் பறவை உருவாகியுள்ளது!


பூவில் ஒரு ஹைக்கூ



நேற்று, கொரியக் குடியரசுத்தலைவரின் மாளிகைக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது. அத்தோட்டத்தில் கண்ட காட்சி!

டைனோ மேனியாக்!

விபரீத விளையாட்டு!

தவளைச் சவாரி (கார்காலக் காட்சி)



If we get the frogs wedded, the Varuna, the god of the oceans, will bless us with rains," Beni Prasad, a farmer in the village of Khapa, told the news service on Sunday.

Read more on this...

நீர் அழகு!

தீ அழகு!

கடல் அலையின் சுவடு!

நத்தையின் சுவடு

Rural lunch

நம்மவூர் வயக்காட்டில் வேலை செய்துவிட்டு அப்படியே ஏதாவதொரு மேட்டில் அமர்ந்து உண்பதுண்டு. அதுபோல்தான் இங்கும். ஒரு நாள் விவசாயிகளுடன் ஆய்வாளர்கள், அவர்கள் பாணியில்!

On display

குதிரையுடன் நடனம்!

பெரு நாட்டுக் குதிரைகளின் நடையழகு. அவை நாட்டியம் கூட ஆடுகின்றன என்று சொல்லி ஒரு அழகியுடன் நடனமாடவைத்தனர். இந்த அழகியைப் பார்த்தவுடன் நமது நடிகைகள் என் நினைவிற்கு வந்தனர். ஆடிமுடித்த பிறகு என்னிடம் வந்து 'தாங்கள் இந்தியரா?' என்று கேட்டார். ஆமாமென்றேன். தனக்கு பாலிவுட் படங்கள் மிகவும் பிடிக்குமென்றும், இந்திய நடிகைகள் தேர்ந்த நர்த்தகிகளென்றும் பாராட்டிப் பேசினார். தன்னுடன் நடனமாட முடியுமா என்று கேட்டார். சம்பிரதாயமாக இம்மாதிரி அழகியுடன் ஆட ஆடவர்கள் வரிசை போட்டுக் காத்திருப்பர். நமக்கு பாலிவுட் புண்ணியத்தில் அடித்தது 'லக்கி பிரைஸ்'. அந்த நடனத்தை யார் படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. கிடைத்தால் இங்கிடுகிறேன்.


ஆடிப்பாடி வேலை செய்தால்...

பெரு மக்கள் நடனத்தை விரும்புகின்றனர். நமது இசையும் ஆடவைக்கக்கூடியதே! ஆனால் நாம் பொதுவில் நடனமாடக் கூச்சப்படுகிறோம். இக்கூச்சம் போனால் ஆட்டத்திற்கு ஆட்டமாச்சு, உடம்பிற்கும் பயிற்சியாச்சு! இங்கு உங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஆடிக்கொண்டு இருக்கிறார்!

ஓவியமா? படமா?

பைத்தா (பெரு) எனும் நகரில் அமைந்த ஒரு மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையைப் பார்வையிட்ட போது ஓரத்தில் இக்காட்சி கண்பட்டது! இவை பெலிகன் பறவைகள்!

ஆட்டோ ரிக்க்ஷா!

நம்ம ஊரு ஆட்டோ இப்போ உலகமெங்கும் பரவிவிட்டது (அது சரி, அது நம்ம ஊருக்கு எங்கிருந்து வந்தது?). தாய்லாந்தில் இதை "தொக், தொக்" என்கின்றனர். பெரு நாட்டில் "மோட்டோடாக்சி" என்கிறார்கள். இப்போது, தாய்லாந்த் தொழில் நுட்பத்தை வைத்து நெதர்லாந்து முழுவதும் தொக், தொக் வரத்தொடங்கியுள்ளது. Euro 3.50 fixed price!

கல, கலப்பான நாடு

சமீபத்தில் ஆசிய பசிபிக் நாடுகளின் வருடாந்திரக் கூட்டத்தொடரில் கொரியாவின் பிரதிநிதியாக பெரு நாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு எடுத்த படங்களை இங்கு பகிர்ந்து கோள்கிறேன். எங்களுக்கு அளித்த விருந்தில் தினம் பல நடனக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஒரு நாள் மாலை நிகழ்வை இப்புழக்கடை சினிமா காட்டுகிறது (ஆரஞ்சு சட்டையுடன் நடனத்தை ரசிப்பது நான்)