கவரும் ஒளியில் தூண்டில்!


மீன் பிடிப்பது கொரியர்களின் பிடித்த பொழுதுபோக்கு. மீனைக் கவர சக்தியுள்ள ஒளி பாய, அடி நீரில் காத்திருக்கும் தூண்டில்!

படிகள்


ஒற்றையடிப்பாதை, அழகிய படிகள் இவை காமெராவின் இச்சைப் பொருட்கள்.

ஆஸ்திரேலிய மலர்


நீண்ட நாட்களாக இது என் வால் போஸ்டராக இருந்தது. கோல்டன் கோஸ்ட், ஆஸ்திரேலியா.

பூவெல்லாம் இரட்டையோ?


யோசித்தால் தோன்றுகிறது! பூவெல்லாம் இரட்டைப் பிறவிகளென்று ;-)

விடிந்த பின்னும் விடியா உறக்கமேன்?


காலையில் அறையை விட்டு வெளியே வரும் போது காலடியில் கிடக்கிறாய். இன்னும் ஏன் உறக்கம்? பறந்து போ, பாதணி படுமுன்!

என் கொல்லை நிலா கொள்ளை அழகு


இன்று பௌர்ணமி. நிலவுக்காட்சிகள் கூடுதலாய் காண!

கோபுர கலசம், கம்போடியா!

முனியே! முக்கண்ணப்பா!


அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லும் அரிய சிற்பம். கம்போடியா (பினாம்பெங் ராஜ மாளிகை)

பேரிங் ஜலசந்தியில் ஓர் தீவு


கப்பலிலிருந்து வெளியே பார்த்த போது எட்டாத தூரத்தில் ஓர் தீவு

பேரிங் ஜலசந்தியில் சூரிய அஸ்தமனம்


எத்தனை ஆயிரம் முறை பார்த்தாலும் சூரிய ஸ்தமனம் அலுப்பதில்லை

கூட்டமர்வு


பயணத்திற்கு முன் பள்ளிச்சிறுவர் தரையில் அமர்ந்திருக்கின்றனர். கொரியா.

தலை அலங்காரம்-கொரியா


ராஜ விவாகம். அந்தக்காலத்துக் கொரிய முடியலங்காரம்

கைதாங்கும் உணவுக்கூடம்!

மேகத்தூண்


மேகத்தைக் கீழிருந்து பார்ப்பதற்கும், மேலிருந்து பார்ப்பதற்கும் வித்தியாசமுள்ளது (கொரிய மேகம், சோல் - சசோல் விமானப் பயணம்)

உயிர்ப்பிடிப்பு


கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் மண். இது போதும் உயிர் வளர. அது நீர்த்துவாரமே எனினும்!

முத்துச்சரம்!


முத்துச்சரம் கடலில் மட்டும்தானா?

தெருவோர அழகு!


தெரு ஓரத்தில் கண்ணுக்குத் தெரியாமல் கிடக்கும் அழகு இது! சின்னச் செடி!

மண்டலம்


யந்திரம், மண்டலம் என்பதெல்லாம் இயற்கையின் அமைப்பு போலும்!

பொசு, பொசு


பொசு, பொசுவென்று எது இருந்தாலும் அழகு, புல்லென்றாலும், முயலென்றாலும்!

முழுநிலவிற்கு முன்

எட்டிப்பார்க்கும் களை


தோட்டக்காரனின் கத்தி தீண்டும்வரையிலான சுதந்திரக் காற்று தீண்டுதல்!

மீண்டுமோர் அந்து!

கொரியக் குழந்தைகள் ஆடை

திருவடியா? வெறும் அடியா?



இந்த அடி நினைவிற்கு வருகிறது!

ஒளிரும் மரம்!


பெரிய கட்டிட வேலை நடக்கிறது. வாரக்கடைசி. எல்லோரும் போய்விட தனியே ஒளிரும் மரம்!

நீர்மூழ்கி


ஒரு காலத்தில் உபயோகத்திலிருந்த நீர்மூழ்கி ஆய்வகம். 3 விஞ்ஞானிகள் பயணிக்கலாம். 300 மீட்டர் ஆழம் போகும்!

கட்டிப்போடும் கயறின் காட்சி


ஓடத்துறை மீண்டும். இரவில் எல்லாமே வித்தியாசம்தான்!

கரைமீதமர்ந்த கிளையினூடே!


ஒரு ஊசியிலை மரம் கடல் கரை கடக்கா வண்ணம் போட்டிருக்கும் கற்பாறை திண்டில் வளர்ந்து நிற்கிறது. அதனூடாக குடாக்காட்சி!

இரவில் குடா!


இரவில் கண்கள் பார்க்கின்றன. நம்மைவிட பூனை, புலிகளுக்கு இரவுக் காட்சியில் தெளிவுண்டு. காமிரா எல்லோரையும் சாப்பிட்டு முழுங்கிவிடுகிறது. என்ன அழகு!

விரையும் ஒளியென விமானம்


இரவுப்படப்பிடிப்பில் நகரும் பொருட்கள் சுவாரசியமான சுவடுகளை விட்டுச் செல்லும். இப்படமெடுக்கும் போது ஒரு விமானம் கேமிராவை நோக்கி வந்து கொண்டு இருந்தது.அது விட்டுச் சென்ற ஒளிச்சுவடு காணீர்!

நீர்நிலை


நிலவின் ஒளியும், விளக்கொளியும் சேர்ந்து நீர்நிலையை காவியமாக்குகின்றன.

தூங்கமுயலும் அந்து


இரவில் விழித்து பகலில் தூங்கும் அந்து, படிக்கட்டில் வந்திறங்கி பகலவன் நேர் எதிரே நின்றால் எப்படி உறங்க?

கடற்கரை!

விண்ணின் மாட்சி

கடல்மஞ்சு


இன்று கடலிலிருந்து நீர்ப்புகை (மேகத்தில் ஒரு வகை)மேலே கிளம்பி மலையைத்தொட்டது!

பற்றுக!


ஓடத்தை தரையுடன் இணைக்கக் கட்டும் கயிறு நீரில் விழுந்தவுடன் பற்றிக் கொண்டு வளர்கின்றன சிப்பிகள். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்பது போல் பற்றுதல் வாழ்விற்கு இன்றியமையாதது ஆகிறது!

வனப்பு


காதல் செய்வதற்கு கவர்ச்சி ஒரு காரணி. பூத்துக்குலுங்கும் அழகு!

பிள்ளைத்தாச்சி


பிள்ளைத்தாச்சி என்றவுடன் மானுடப் பெண்தான் நினைவிற்கு வர வேண்டுமா? இவளும் வளைந்து, வயிறு தள்ளி, வனப்புடன்தானே இருக்கிறாள்?

சில்லென்று ஒரு சிலிர்ப்பு


தோகை விரித்து ஆடும் மயில் அவ்வப்போது சிலிர்த்துக்கொள்ளும், இது போல்!

தோற்றப்பிழை


நீர்த்துளி போல் தோற்றமளிக்கும் நோய்க்கட்டிகள்!

தளிர்

மலருக்கு மாலை!


மலர்தான் மாலையாக வேண்டுமா? மலருக்கும் மாலையுண்டு!

விதை கண்ட பின் வீழும் மலர்


குனிந்த நிலையில் அல்ல மலர், கூர்ந்து கவனித்தால் இதழ்கள் மெல்லக் கீழே வீழ்ந்தல் காணலாம். கருவுற்ற நிலையில் ஆடம்பரங்களைக் களைகிறது மலர்!

வலையனின் வலை!



வலையன் வலை விரித்தான் இறால், நண்டு பிடிக்க. வலைக்குள் உயிர் வதை என்றாலும் வலைமேல் ஆயிரம் உயிர்கள் அண்டி வளர்ந்தன!

எண்வரம்பின் அறியா யாக்கை!

இரவில் படகுத்துறை



இரவில் படமெடுப்பது ஒரு கலை. கேமிராவை மிகுவிழிக்கச் செய்து, ஒளிசேரும் இடத்தை மிகுபதப்படுத்தி எடுக்க வேண்டும். கை நடுங்குதல் கூடாது. இப்படிப் பல நிபந்தனைகள். எல்லாம் கூடி வந்தால் ஒரு கவிதை கண் முன் நிற்கும்!

புயல் வரும் பின்னே! கப்பல் வரும் முன்னே!



கொரியாவை புயல் கடக்குமென்று தெரிந்தால் பல கப்பல்கள் எங்கள் ஆய்வகத் துறைக்கு வந்துவிடும்!

தியான்மு புயல் (2)



நல்ல வேளையாக புயற்சேதம் இங்கில்லை!

மாலை வானும், கடலும்



விண்ணும் மண்ணும் ஒன்றையொன்று ரசித்துக் கொண்டிருக்கும் மாலை!

கப்பல் மூழ்குகிறதா? (படம் 1)

கப்பல் மூழ்குகிறதா? (படம் 2)



ஓ! இல்லை இல்லை! இரண்டு கப்பல்கள் அருகருகே! சின்னக்கப்பல் பெரிய கப்பலுக்கு ஒத்தாசை இயைவு.