வசந்த அழகும், மாபல்லிச்சுவடும்


நேற்று இரண்டு சகாவுடன் ஒரு காலத்தில் டைனோசார்கள் (மாபல்லி) துள்ளி விளையாடிய குளக்கரை காணச் சென்றோம். போகும் வழியெல்லாம் வசந்தம் பூத்துக்குலுங்கியது. வயல்வெளியில் நெல் நடவு மும்முரமாக இருந்தது. குளங்களில் தாமரை பூத்துக்குலுங்கின. அழகு, அழகு! எங்கும் அழகு!

பலகோடி ஆண்டுகளுக்கு முன், மாபல்லிகள் வாழ்ந்த ஜுராசிக் காலத்தில் கொரியாவில் ஒரு பெரிய ஏரி இருந்திருக்கிறது. அங்கு சாக, மாமிச மாபல்லிகள் வாழ்ந்திருக்கின்றன. அவை காலம் முடிந்தது. அந்த ஏரியும் வற்றி, மக்கி, மண்ணாகி, மண் பாறையாகிப் போனது. காலப்போக்கில் கடல் மட்டம் உயர்ந்தது. அந்த ஏரி இருந்த இடம் இப்போது தென்கடல் கடற்கரையாக மாறிப்போனது. அங்கு போனது ஒரு பெரிய அனுபவம். டைனோசார் பற்றி கடந்த சில தசாம்ங்களில் ஆச்சரியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படி மாபல்லிப் பாதப்பதிவுள்ள இடங்கள் உலகில் குறைவு. கொரியாவில் ஒன்று உள்ளது.

இந்தப் பயண அனுபவத்தை ஒரு புகைப்படத்தொகுப்பாக்கி இங்கு வழங்குகிறேன். கண்டு களியுங்கள்!
Photo by N.Kannan


சந்திரபிம்பத்தை எடுப்பதுபோல் எளிதானதல்ல சூரிய பிம்பத்தை எடுப்பது!
Photo by N.Kannan


நொடியில் கண்ணைக்கூச வைத்துவிடுகிறது!
Photo by N.Kannan


காலையில் நான் எழும் முன்னமே சூரியன் எழுந்துவிடுகிறது. அன்று அப்படியில்லை. அண்ணன் மலை மேல் ஏறும் போது பிடித்துவிட்டேன்!
Photo by N.Kannan


உலகின் முதல் மூன்று சிறந்த கப்பல் கட்டும் நிறுவனங்கள் கொரியர்களுடையது. சாம்சுங், தேவு, ஹுயுந்தே!
Photo by N.Kannan


என் நண்பனின் வாண்டுகள்!
Photo by N.Kannan


எந்தப்பாசாங்குமில்லாமல் ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பின்னும் கொரியக் கலைஞர்கள் வெளிநாட்டுகப் பிரயாணிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது மிக அழகிய பண்பு!
Photo by N.Kannan


உயிருள்ள கொலு பொம்மைகள்? கிராமிய நடன நர்த்தகிகள்!
Photo by N.Kannan


எத்தனை முறை படமெடுத்தாலும் அலுக்காத கொரியத்தென்கடல்!
Photo by N.Kannan

Observer is observed

நேஷனல் ஜியாகிரபிக்கில் ஒரு புதிய அம்சமுண்டு. புகைப்படக் கலைஞர் படமெடுத்துக் கொண்டிருக்கும் போது அவரைப் படமெடுத்துப் போடுவது என்று. அவர் படத்தில் ஒரு கதை உருவாக்கிக்கொண்டிருக்கும் 'அவர்' படத்திலும் ஒரு கதையுண்டு என்று இந்தப்படங்கள் சொல்லும். இதோ அப்படி நான்கு படங்கள் கீழே:

படம் 1:

சகுரா மரத்தைப் பிடித்துத் திரும்பும் போது:



எடுத்த படம்:



படம் 2:

சோயா பருப்பைக் கடையும் உருளையைப் படமெடுத்த போது:



எடுத்த படம்:



படம் 3:

பூந்தொட்டி போன்ற தோற்றத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது...



எடுத்த படம்:



படம் 4:

கொரிய அழகியைப் படமெடுத்த நுழைவாயில் (அருகில் இருப்பவர் திரு.சுவே)



எடுத்த படம்:

பூ விழும் மலர் வனம்

இரண்டு வாரமாக காய்ச்சல், தடுமன். காய்ச்சல் வரும், போகும், செர்ரி மலர்கள் வருடத்தில் ஒரே பருவத்தில் மட்டுமே பூக்கும். அது வசந்தம். இதுவரை நான் ஜப்பானிய சக்குரா (செர்ரி) மலர்க் காட்சியே உலகின் ஆகப்பெரிய அழகு என்று எண்ணியிருந்தேன். நெற்று 100 கி.மீ பயணப்பட்டு போன இடத்தில் குறைந்தது 30 கி.மீ நீளத்திற்கு சாலையின் இரு மருங்கிலும் செர்ரி மலர்களைப் பார்த்தது வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம். உங்களுக்காக அப்பயணத்தின் இ-சுவடை (இலத்திரன் சுவடு) 'சக்குரா' எனும் வலைப்படக் கொத்தாக்கியுள்ளேன். பார்த்து அனுபவியுங்கள். தமிழ் குறிப்பு தஸ்கி தமிழில் அமைந்துள்ளது.




Photos by N.Kannan


Spring in Namhae National Park, Korea
Photo by N.Kannan


mUnRAm piRai - Koje Korea March 12, 2005.
Photo by N.Kannan


The first blossm after a hard winter is refreshing. Spring comes....Koje, (Korea) March 12, 2005.
Photo by N.Kannan


Happy Women's Day :-)
Photo by N.Kannan


Chinese temples in Thailand are huge, complex and eye-catching with myriad Indo-Chinese Gods and symbols. Constructed in multiple layers, a corridor at the 3rd level.
Photo by N.Kannan


Temptation!-right in the temple complex :-) A Thai lady selling lottery tickets
Photo by N.Kannan


Small wonders of nature. Cones from my backyard!
Photo by N.Kannan


What a feeling! (Jeju, Korea)
Photo by N.Kannan

கடல் வாழ்க! 01


வான் சிறப்புப்பாடும் வள்ளுவன் "நீரின்றி அமையாது உலகு" என்பான். காலையில் எழுந்தவுடன் இந்த நீலநிறக் கடலைக் காணாவிடில் கண்கள் பூத்துப்போகின்றன. எனது முதல் அனுபவம் திருச்செந்தூர். அது ரொம்ப ஆக்ரோஷமான கடல். கிட்டக்க நெருங்கவிடாத கடல். பயமுறுத்தும் கடல். ஆனால், ஜெர்மனியிலுள்ள பால்டிக் கடல் ரொம்ப சாது. அலையே அடிக்காது (அலையில்லாமல் என்னய்யா கடல்? என்று கேட்காதீர்கள் :-) இரண்டாம் பனிக்காலம் முடிந்து கடல் உள்வாங்கும் போது தோன்றியதுதான் பால்டிக். ஆகப்பெரிய ஆழமே 300 மீட்டர்தான். அதிலும் நிறைய வளைகுடாக்கள் உண்டு. கீல் பே (வளைகுடா) 13 கிமி நீளமுடையது. ஒரே ஒரு மாசம்தான் அது தன் சூரத்தனத்தைக்காட்டும். அது நவம்பரில். அப்போது புயல் அடிக்கும். அவ்வளவுதான். அதுக்கப்புறம், அது ஏரி மாதிரி சாதுவா இருக்கும். அங்குதான் என் வாழ்வின் எத்தனை பொழுதுகள்! இப்போது இந்தக் கொரியத் தென்கடல். இதுவும் வளைகுடா. ரொம்ப சாது. ஏதோ காலையில் பார்க்கும் போது ஜிலு, ஜிலு என்று ஆறுபோன்ற பிரம்பிப்பைத் தருகிறது! கடலை எவ்வளவு வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம். அது தரும் நிம்மதியே தனி.

Photo by N.Kannan