கொரியன் சொக்கப்பான்


சித்திரா பௌர்ணமியன்று கள்ளழகர் மதுரை ஆற்றில் இறங்குவார். குழந்தையாய் இருக்கும் போது அது ஒரு குதுகூல நிகழ்வு. பௌணர்மி எல்லா கலாச்சாரங்களிலும் முக்கியமானதே! இந்த சந்திர ஆண்டு பிறந்த விழாக்கள் பிப்ரவர் 12 அன்று முடிவடைந்தன. அது சமயம் நம்ம ஊரில் கொளுத்தும் சொக்கப்பான் போலவே இங்கும் ஏற்றுகிறார்கள். பழையன கழிந்து புதியன பிறக்க வேண்டும் சைகை போலும். மேல் விவரங்களை பிற வலைப்பதிவுகளில் தருகிறேன்.
Photo by நா.கண்ணன்

பனியின் கலை!


Art of snow!
காலையின் கதவைத் திறந்தால் கலையின் காட்சி! எப்போதாவதுதான் இங்கு பனி பெய்கிறது. அன்று கல்யாணப்பெண் போல் நிலமகள் தன்னை வசீகரித்துக்கொள்கிறாள்!
மற்ற படங்களையும் காண...
Photo by N.Kannan

இரவுப் பாலம்


இரவில் பூசான் கடற்கரை
Photo by N.Kannan

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


Happy New Year!
பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்!! கலியும் கெடும்!!
என்று நல்வாழ்த்துக்கூறுவார் நம்மாழ்வார். எப்படியோ, blogger.comக்குள் நுழைவதற்காக இருந்த தடை இப்போது இங்கு நீங்கிவிட்டது. தொடர்ந்து பங்கு பெறலாம். எந்தை சடகோபனுடன் இணைந்து உங்களை வாழ்த்துவதில் மகிழ்வு கொள்கிறேன்.
Photo by N.Kannan

தரை தட்டும் தெப்பம்!


இக்காட்சி கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. நீர் இறங்கிவிட்டால் படகு தரை தட்டிக் கிடப்பது வெடிக்கைதான். மூச்சு இருக்கும் வரைதான் ஆட்டம் பாட்டமெல்லாம் என்பது நினைவிற்கு வரவில்லை?

Photo by N.Kannan

ஓய்வு


ஓய்வுPhoto by N.Kannan

டாட் காம் பவர்


இணையம் சென்ற நூற்றாண்டின் புரட்சி. எல்லா கணக்குகளையும் புரட்டிப் போட்டுவிட்டது (இப்படி உங்களுக்கு படம் காட்டிக்கொண்டிருப்பதிலிருந்து!) யார் எதிர்பார்த்தது? விமானத்தின் பெயரில் டாட் காம் இருக்குமென்று. அயர்லாந்தின் சுதந்திர தினத்தன்று வருபவரெல்லாம் இலவசமாகப் பறந்தனர்! இணையம் உலகை மலிவாக்கிவிட்டது உண்மை!
Photo by N.Kannan

வின்னில் பறப்பது


இப்படம் எனக்கு காட்டுவதை விட விட்டுப்போனதையே சுட்டுகிறது. காட்சி கூடும் போது கேமிரா கையில் இருக்காது, கையில் இருந்தால் பேட்டரி இருக்காது, பேட்டரி இருந்தால் எடுப்பதற்குள் விமானக் காட்சி மாறியிருக்கும். விட்டுப் போன ஆயிரம் காட்சிகளின் சாட்சியாக இந்த மேகம் நிற்கிறது.
Photo by N.Kannan

நல்வரவு


இப்போது இந்தியாவில்தான் தமிழைக் காணவில்லை. ஹாங்காங்கில் இப்படியொரு வரவேற்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை!
Photo by N.Kannan

வளர்ப்பு


விமான நிலையங்கள் வித்தியாசமானவை. கண்ணிற்கும், நம் மணிபர்சிற்கும் விருந்து வைக்கும் இடமது. மூட்டை முடிச்சுக்களுக்கிடையில் இக்குழந்தையின் கவனம் புத்தகத்தில் இருக்கிறது. குழந்தைகளின் எளிமை, இலகு, கூச்சமின்மை நமக்கு எப்போதும் பாடம் சொல்பவை!
Photo by N.Kannan

பொத்தகீர்ப்பு!


பொத்தகங்களின் ர்ரிப்பு அலாதியானதுதான். காலைக் கையை கட்டிப்போடக்கூடியது என்பதை எவ்வளவு அழகாக இந்த நாற்காலிச் சிற்பம் விளக்குகிறது. எங்கு இது உள்ளது என்று தெரியுமோ? பிரித்தானிய நூலகம்!
Photo by N.Kannan

லண்டன் மாலை


லண்டனுக்கோ எத்தனையோ அழகுண்டுதான். அந்த அடுக்கு வீடுகள் நீலத்தை ஒத்திக்கொண்டு...
Photo by N.Kannan

சாயம் கொண்ட பூமி


இப்படிக்கூட நீலம் கொள்ளுமோ பூமி?
Photo by N.Kannan

சிற்பம் இயற்கையுடன் ஒருமையுரும் தருணம்


மாலை எப்போதும் மயக்கக்கூடியது. இயற்கை அழகுடன், மனித சிற்பமும் சேரும் போது அழகு இரட்டிக்கிறது!
Photo by N.Kannan

வைக்கோல் போர் (உருளை!)


குழந்தைப் பருவம் என்றவுடன் வைக்கோல் போரில் உருண்டு, புரண்ட ஞாபகம்தான் உடனே வரும். இந்தியாவில் இன்னும் அப்படித்தான் வைக்கோல் மலையாக நிற்கிறது. ஐரோப்பாவில் அறுவடை முடிந்த கையோடு வைக்கோலை சுருட்டி இப்படி உருளையாக்கி விடுகின்றனர்!
Photo by N.Kannan

மங்கும் போழ்திலும் பொங்கும் அழகு!


பொங்கி விளையும் அழகு ஆல்ப்ஸ் மலைத்தொடர். மாலை மயங்குகிறது. எட்டத்தில் எங்கோ சூரியன் இருக்கிறது. ஒளியை வாங்கிக்கொண்ட மேகம் கடைசி நிமிடத்திலும் ஒரு வண்ண விளையாட்டு விளையாடிவிட்டுப் போகிறது.
Photo by N.Kannan

மலையுடன் பேசும் பொறுமை நமக்குண்டோ?


ஸ்விஸ் முழுவதும் மலைதான். மலையை ரசிக்க பழகிக்கொள்ள வேண்டும். ஒரு பொழுது போல் ஒரு பொழுது இருப்பதில்லை. மலையும், மேகமும் செய்யும் விளையாட்டு குழந்தைகளின் விளையாட்டிற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல!
Photo by N.Kannan

கூடற்சூடு


ஏதோ முன்னமே ஏற்பாடு செய்தது போல் நாங்கள் அந்த பள்ளத்தாக்கில் நிற்கும் போது மேகத்தைத் துளைத்திற்குக்கொண்டு ஒளி வீசியது. மலை உடனே பற்றிக்கொண்டது.
Photo by N.Kannan

மேகம் வாழும் ஊர்


Villars என்றழைக்கப்படும் இடத்திலிருந்து Solalex எனும் பள்ளத்தாக்கிற்கு மாலை உணவிற்குச் சென்றோம். மேகமும் வந்தது கூடவே! அது கூடல் நேரமென்று அப்போதுதான் தெரிந்தது!
Photo by N.Kannan

புல்லின் வெண்மை


மழை பெய்த மறுநாள்!
Photo by Sweta Kannan