ஆ! துவைதம்!!


என் எண்ணம்
this is an audio post - click to play
Photo by N.Kannan

5 comments:

  .:dYNo:.

11:47 pm

This comment has been removed by a blog administrator.
  .:dYNo:.

11:48 pm

கடவுளையும் மனிதனையும் பிரித்துவைத்து இடைத்தரகர்களுக்கு வழி ஏற்படுத்தித்தரும் 'இரண்டில்' என்ன இன்பம்? இரண்டறக்கலப்பதே சிறந்த மார்க்கம்!

.:dYNo:.

  Dr.N.Kannan

7:45 am

இரண்டறக்கலப்பதிலேயே இன்பம்! ஆயின், அந்த 'இன்பம்' வருவதே 'இரண்டாக' இருப்பதில் இருந்து அல்லவா வருகிறது. சுவை-சுவைப்பவன், இன்பம்-நுகர்பவன், காட்சி-காண்பவன் இந்த இரட்டிப்பில்தானே உலகம் சுழல்கிறது! காட்சியும், காண்பவனும் இல்லையெனில் இப்புகைப்படக்கலைக்கு இடமே இல்லையே!

ஆனால் உங்கள் உள்ளம் புரிகிறது. அத்துவைத தத்துவத்தை நிருவிய ஆதிகுரு சங்கரர் இக்காட்சியையே உதாரணமாக எடுத்துக்கொள்கிறார். ஒன்றுதான் இருக்கிறது. அதன் பிரதிபிம்பங்கள் பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கின்றன. பிம்பம் இல்லையெனில் பிரதிபிம்பம் இல்லை. கடல் அலையில் விகாரப்படும் பிரதி பிம்பம் போல் சம்சார சாகரத்தில் விகாரப்பட்டு அவஸ்தைப்படுவது பிரதிபிம்பம். பிரதி பிம்பம் நிரந்தரமானது அல்ல. ஒளியின் திசை, அடர்ஹ்தி இவை பொருத்து பிரதி பிம்பம் மாறும். பிரதிபிம்பத்தின் விகாரங்கள் மூலத்தை ஒன்றும் செய்வதில்லை. மாலை ஒளியில் நீளும் பிரதிபிம்பத்தின் ஆகிருதியை உண்மையென்று கண்டு பிரதிபிம்பம் 'டம்பம்' அடித்துக்கொண்டால் அது அதன் பிழைதானே!

துவைதம் இருப்பதே அத்துவைதத்தை அனுபவிக்கத்தானே! வாழ்க!

  .:dYNo:.

11:57 am

காட்சி & அதைக்காண்பவன் => என்பதிலிருந்து அந்தக்காட்சியும் நான் என்பதில் ஒரு முதிர்ச்சி தெரிகிறதில்லையா? ஆத்மா பரமாத்மாவை நோக்கி எப்போதும் தொழுவது அடிமைத்தனத்தின் அடித்தளமாகப்படுகிறது. நம்மைநாமே பிரதிபிம்பங்களாய் கருதுவது 'Self Pity' க்கு வழிவகுக்குமில்லையா?

>>>>ஒன்றுதான் இருக்கிறது. அதன் பிரதிபிம்பங்கள் பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கின்றன.

ஒன்றேதான் இருகிறது அதுவே உலகெங்கும் நிறைந்திருக்கிறது என்றுதானே சொன்னார்?

>>>>துவைதம் இருப்பதே அத்துவைதத்தை அனுபவிக்கத்தானே!

அத்துவைதமிருந்தால் துவைதமென்பதேது?

  Dr.N.Kannan

3:24 pm

சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டியுள்ளது. நீங்களும் அதையே விரும்புகிறீர்கள் என்று நம்புகிறேன். எனவே பின்னூட்டத்திலிடாமல் எனது முதன்மைப் பதிவில் இட்டுள்ளேன்.

இச்சுட்டியில் தட்டினால் அது என் பதிலுக்கு இட்டுச்செல்லும்.