வசந்த அழகும், மாபல்லிச்சுவடும்


நேற்று இரண்டு சகாவுடன் ஒரு காலத்தில் டைனோசார்கள் (மாபல்லி) துள்ளி விளையாடிய குளக்கரை காணச் சென்றோம். போகும் வழியெல்லாம் வசந்தம் பூத்துக்குலுங்கியது. வயல்வெளியில் நெல் நடவு மும்முரமாக இருந்தது. குளங்களில் தாமரை பூத்துக்குலுங்கின. அழகு, அழகு! எங்கும் அழகு!

பலகோடி ஆண்டுகளுக்கு முன், மாபல்லிகள் வாழ்ந்த ஜுராசிக் காலத்தில் கொரியாவில் ஒரு பெரிய ஏரி இருந்திருக்கிறது. அங்கு சாக, மாமிச மாபல்லிகள் வாழ்ந்திருக்கின்றன. அவை காலம் முடிந்தது. அந்த ஏரியும் வற்றி, மக்கி, மண்ணாகி, மண் பாறையாகிப் போனது. காலப்போக்கில் கடல் மட்டம் உயர்ந்தது. அந்த ஏரி இருந்த இடம் இப்போது தென்கடல் கடற்கரையாக மாறிப்போனது. அங்கு போனது ஒரு பெரிய அனுபவம். டைனோசார் பற்றி கடந்த சில தசாம்ங்களில் ஆச்சரியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படி மாபல்லிப் பாதப்பதிவுள்ள இடங்கள் உலகில் குறைவு. கொரியாவில் ஒன்று உள்ளது.

இந்தப் பயண அனுபவத்தை ஒரு புகைப்படத்தொகுப்பாக்கி இங்கு வழங்குகிறேன். கண்டு களியுங்கள்!
Photo by N.Kannan


சந்திரபிம்பத்தை எடுப்பதுபோல் எளிதானதல்ல சூரிய பிம்பத்தை எடுப்பது!
Photo by N.Kannan


நொடியில் கண்ணைக்கூச வைத்துவிடுகிறது!
Photo by N.Kannan


காலையில் நான் எழும் முன்னமே சூரியன் எழுந்துவிடுகிறது. அன்று அப்படியில்லை. அண்ணன் மலை மேல் ஏறும் போது பிடித்துவிட்டேன்!
Photo by N.Kannan


உலகின் முதல் மூன்று சிறந்த கப்பல் கட்டும் நிறுவனங்கள் கொரியர்களுடையது. சாம்சுங், தேவு, ஹுயுந்தே!
Photo by N.Kannan


என் நண்பனின் வாண்டுகள்!
Photo by N.Kannan


எந்தப்பாசாங்குமில்லாமல் ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பின்னும் கொரியக் கலைஞர்கள் வெளிநாட்டுகப் பிரயாணிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது மிக அழகிய பண்பு!
Photo by N.Kannan


உயிருள்ள கொலு பொம்மைகள்? கிராமிய நடன நர்த்தகிகள்!
Photo by N.Kannan


எத்தனை முறை படமெடுத்தாலும் அலுக்காத கொரியத்தென்கடல்!
Photo by N.Kannan