ஜீப்னி - Jeepny


மணிலாவின் தெருக்களில் ஊரும் ஜீப்னி. 20-25 பேர்கள் செல்லக்கூடிய வாகனம். மூன்றாம் உலக நாடுகளின் இத்தகைய தேவையான கண்டுபிடிப்புகளுக்கு அறிவியல்-தொழில்நுட்பம் உதவினால் செலவற்ற போக்குவரத்து வசதி செய்யமுடியும். மணிலாவில் மீட்டர் உண்டு. யாரும், யாரையும் ஏமாற்றுவதில்லை!
Photo by N.Kannan

அமெரிக்க பட்டாம்பூச்சி


பட்டாம்பூச்சியைப் படம் பிடிப்பது கடினம். அதுவும் கைக்கேமிரா வைத்துக் கொண்டு கிட்டே போய்!!
Photo by N.Kannan

காக்கா குளியல்

ஜொலிப்பு

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்


குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்,
கொம்பேறித்தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!
(ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில். பாலூட்டிகளின் தோற்றம் எனும் ஆவணப்படம் பார்க்கும் சிறுவர்கள்)
Photo by N.Kannan

நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்சில் இந்தியக் கொடி!


நியுயார்க் வால் ஸ்டிரீட் (Wall Street) போயிருந்தபோது நமது தேசியக்கொடி அமெரிக்க கொடியுடன் பறந்து கொண்டு இருந்தது? என்ன விசேஷம்? இந்தியாவை மெல்ல, மெல்ல உலகம் அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டதின் அறிகுறியா?
Photo by N.Kannan

நாய்குடை


அமெரிக்க நாய்குடையும் அதே அழகில்!
Photo by N.Kannan