ஏற்றம்


மலையேற்றம் என்பது ஆரோக்கியமானது. உயரத்தில் இருக்கும் போதுதான் தெரியும் கடந்து வந்த தூரமும், பாதைகளின் சிக்கலும்! உயரத்தில் இருப்பது எளிதானதல்ல. ஆபத்தானது. இருப்பை தக்க வைக்க விழிப்புடன் இருக்க வேண்டும்!

மாறும் மலை


இந்தியாவில் மலைகள் எப்போதும் பச்சையாக இருக்கும். ஆனால் கொரியாவில் அவை மாறும்!

தியானம்


புத்தனின் தியான நிலையை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை!

அடுக்குகல்


ஆசிய நாடுகளில் பல புத்த சமயத்தைத் தழுவின. ஆன்மீக நிலையில் உயர்ந்தலைக் குறிக்கும் பகோடா ஒரு புத்த குறியீடு. இதை எளிய வழியில் காட்டும் வகையில் கல்லை அடுக்கி வைக்கிறார்கள் இங்கு. இப்போது இது திருமலைக்கும் வந்துவிட்டது என்று கேள்வி!

கொலு


கொரியாவிலுள்ள ஒரு பழைய பகோடா