தியானம்


புத்தனின் தியான நிலையை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை!

4 comments:

  kannabiran, RAVI SHANKAR (KRS)

12:58 am

புத்தரின் தியானத்தில் இதழ்க்கோட்டு ஓரம் ஒரு மெல்லிய சிரிப்பைக் காணலாம். அதுவே வசீகரம்!

சார், அந்த ஸ்தூபியில் உள்ள பறவை கருடனா? மனித முகப் பறவை போல் உள்ளது!

  நா.கண்ணன்

10:04 am

ரவிசங்கர்: குன்று இருக்கும் இடமெல்லாம் சித்தார்த்தன் என்ற குமரன் இங்கு இருக்கிறான். எத்தனை கோயில்கள், எவ்வளவு பிரம்மாண்டமான சிலைகள்! கிழக்கே வந்தால்தான் நம் அருமை நமக்கே புரிகிறது. அப்பறவை ஃபீனிக்ஸ் என்று எண்ணுகிறேன் (?) சீனக்குறியீடு அது. கொஞ்சம் மயில் போல் இருக்கும். மனித முகம் கிடையாது.

  துளசி கோபால்

10:32 am

அவருக்கென்னப்பா?
நாளைக்கு என்ன குழம்பு வைக்கணுமுன்ற கவலையெல்லாம் இல்லையே?:-)))

இதழ்கடையோரம் சிரிப்பு வராதா என்ன?

நம்ம வீட்டு பெருமாள் விக்ரஹத்திலும் இந்த இதழ்கடையோரச் சிரிப்பு இருக்கு.

  நா.கண்ணன்

10:39 am

துளசி:

சும்மாவா பாடினாரு நம்ம பாணர்: 'என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே' என்று.

நம்ம 'தேன் துளி' பத்மா வீட்டில் ஒரு ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்கிரகம் பார்த்தேன். கொள்ளை அழகு! கர்நாடகத்தில் செய்ததாம்.

கீதை கேட்கும் திறன் இல்லாதோரை அவன் அழகால் மயக்கிவிடுகிறான் என்பதே நம் ஆச்சார்யர்கள் துணிபு. அவன் பெயரே 'மால்' அல்லவோ!