ஏற்றம்


மலையேற்றம் என்பது ஆரோக்கியமானது. உயரத்தில் இருக்கும் போதுதான் தெரியும் கடந்து வந்த தூரமும், பாதைகளின் சிக்கலும்! உயரத்தில் இருப்பது எளிதானதல்ல. ஆபத்தானது. இருப்பை தக்க வைக்க விழிப்புடன் இருக்க வேண்டும்!

12 comments:

  துளசி கோபால்

3:24 pm

'ஏத்தமையா ஏத்தம்
மனசு ரொம்ப ஏத்தமைய்யா ஏத்தம்'னு
ஏறும்போது பாடினீங்களா இல்லையா? :-)வாழ்க்கையிலும் இப்படித்தான், இப்ப இருக்கும் நிலையை
அடைஞ்ச பிறகு திரும்பிப்பார்த்தா.............

கடந்து வந்த பாதை! பிரமிப்பாத்தான் இருக்கு.

  Dr.N.Kannan

3:45 pm

நன்றி:

சரி, சரி..உங்களை இந்த அந்தாக்ஷரி விளையாட்டுக்கு சேர்த்துக்கொள்ளலாம் போல..பஸ்ஸுக்குள் நிறையப் பாடினோம். வெளியில் இல்லை :-)

அதுவொரு நெட்டுக்குத்தலான மலைப்பகுதி. மேலே போய் பார்த்தால் மலைப்பாக இருக்கு. இவ்வளவு தூரம் நாமதான் வந்தோமாவென்று :-)

  ramachandranusha(உஷா)

4:55 pm

கண்ணன் சார், ரொம்ப பெரிய உயரத்துக்குப் போய்விட்டால், எப்ப சறுக்குமோ விழுந்துவெப்போமோ என்ற பயம் இருந்துக் கொண்டே இருக்குமே, உயரமான இடத்தை அடைந்ததன் மகிழ்ச்சியைவிட ;-)

  Dr.N.Kannan

4:59 pm

உயரத்தின் பலமும் பலவீனமும் அதுதான். மேலே போகவில்லையெனில் இருப்பின் ரகசியம் தெரிய வாய்ப்பே இல்லை :-)

  ramachandranusha(உஷா)

5:29 pm

இல்லை கண்ணன் சார், அதீத உயரம் அடைந்தவன் மனநிலைமை ஒரு நாள் சந்தோஷமாய் நிம்மதியாய் இருக்குமா?

  Dr.N.Kannan

6:22 pm

உஷா:

உங்கள் கூற்று புரிகிறது. அதீத உயரங்களில் நிலையாமை என்பது கணச்சத்தியம்! ஆனால் எந்த உயரத்தை, எப்படி, எதற்காகக் குறி வைக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் பயம், பயமின்மை என்பது அமையும். சமூக அரசியல் வாழ்விற்கு உங்கள் கூற்று முற்றும் பொருந்தும். ஆன்மீக, ஆரோக்கிய வாழ்வில் சிகரங்கள் முக்கியமானவை. அதுவே முன்னேற்றத்தின் உந்துதல்!

  பத்மா அர்விந்த்

12:26 am

கண்ணன்
படிப்படியாக கடந்து வந்த உயரத்தில் சறுக்குதல் என்பதே இல்லை. நல்ல புகைப்படம்.

  Kannabiran, Ravi Shankar (KRS)

12:54 am

//எப்படி, எதற்காகக் குறி வைக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் பயம், பயமின்மை என்பது அமையும். சமூக அரசியல் வாழ்விற்கு உங்கள் கூற்று முற்றும் பொருந்தும். ஆன்மீக, ஆரோக்கிய வாழ்வில் சிகரங்கள் முக்கியமானவை.//

மிகவும் சரியாகச் சொன்னீங்க கண்ணன் சார்!. சித்தர்கள், முனிவர்கள் கூட என்ன தான் காட்டில் இருந்தாலும், மலைகளையே பெரிதும் விரும்பினார்கள். இமய மலை இன்னும் பல சாதகர்களின் கூடாரமாகத் தான் திகழ்கிறது. ஒரு வேளை உயரத்தின் பயமே, அவர்களுக்கு நிலையாமையை உறுதிப்படுத்துகிறதோ என்னவோ!

நம்ம தலைவர் ரஜினியும் இமய மலைக்கு அடிக்கடி ஓடுறாரே! இதே காரணங்கள் தானோ? :-))))

  Dr.N.Kannan

10:07 am

பத்மா: சரியாகச் சொன்னீர்கள்! முறையாக ஏறும் போது, ஏற்றங்கள் கூட சிறு, சிறு படிக்கற்களே! ஆனால் ஏறியபின், அதுவொரு சிகரம்! ஆனால், சிகரத்தின் உச்சியில் இருந்து பார்க்கும் போது ஒரு ஆனந்தமுண்டு.

  Dr.N.Kannan

10:12 am

கண்ணபிரான்:

"ஒரு வேளை உயரத்தின் பயமே, அவர்களுக்கு நிலையாமையை உறுதிப்படுத்துகிறதோ என்னவோ"

பயம் என்பதை வெல்ல மலையேறுதல் நல்ல சாதனை. எந்த ஏற்றமும் அளவுகளிலேயே நிகழ்கிறது (ராக்கெட்டில் போகாதவரை :-)

ஜனனி, ஜனனின்னு பாடினவுடனே, "இசைஞானி' ன்னு பட்டம் கொடுத்த தமிழகம், பாபாவிற்குப் பிறகும் ரஜனிக்கு எப்படி ஒரு 'மெய்ஞான டைட்டில்' கொடுக்காமல் இருக்கிறது? உண்மையில் வில்லன் நம்பியார் பெரிய ஐயப்பா பக்தர் 'குரு ஸ்வாமி'

  துளசி கோபால்

10:23 am

//ரஜனிக்கு எப்படி ஒரு 'மெய்ஞான டைட்டில்' கொடுக்காமல் இருக்கிறது?//

சும்மாக் கிடந்த சங்கை.............

நீரும் சும்மா இருக்கமாட்டீர்போல இருக்கே:-)

  Dr.N.Kannan

10:27 am

துளசி:

காலை வணக்கம்!

ஏதோ நம்மால ஆன சின்ன உதவி. ஊதற சங்கை ஊதி விடுவோம்:-)