ஓய்வு


ஓய்வுPhoto by N.Kannan

டாட் காம் பவர்


இணையம் சென்ற நூற்றாண்டின் புரட்சி. எல்லா கணக்குகளையும் புரட்டிப் போட்டுவிட்டது (இப்படி உங்களுக்கு படம் காட்டிக்கொண்டிருப்பதிலிருந்து!) யார் எதிர்பார்த்தது? விமானத்தின் பெயரில் டாட் காம் இருக்குமென்று. அயர்லாந்தின் சுதந்திர தினத்தன்று வருபவரெல்லாம் இலவசமாகப் பறந்தனர்! இணையம் உலகை மலிவாக்கிவிட்டது உண்மை!
Photo by N.Kannan

வின்னில் பறப்பது


இப்படம் எனக்கு காட்டுவதை விட விட்டுப்போனதையே சுட்டுகிறது. காட்சி கூடும் போது கேமிரா கையில் இருக்காது, கையில் இருந்தால் பேட்டரி இருக்காது, பேட்டரி இருந்தால் எடுப்பதற்குள் விமானக் காட்சி மாறியிருக்கும். விட்டுப் போன ஆயிரம் காட்சிகளின் சாட்சியாக இந்த மேகம் நிற்கிறது.
Photo by N.Kannan

நல்வரவு


இப்போது இந்தியாவில்தான் தமிழைக் காணவில்லை. ஹாங்காங்கில் இப்படியொரு வரவேற்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை!
Photo by N.Kannan

வளர்ப்பு


விமான நிலையங்கள் வித்தியாசமானவை. கண்ணிற்கும், நம் மணிபர்சிற்கும் விருந்து வைக்கும் இடமது. மூட்டை முடிச்சுக்களுக்கிடையில் இக்குழந்தையின் கவனம் புத்தகத்தில் இருக்கிறது. குழந்தைகளின் எளிமை, இலகு, கூச்சமின்மை நமக்கு எப்போதும் பாடம் சொல்பவை!
Photo by N.Kannan

பொத்தகீர்ப்பு!


பொத்தகங்களின் ர்ரிப்பு அலாதியானதுதான். காலைக் கையை கட்டிப்போடக்கூடியது என்பதை எவ்வளவு அழகாக இந்த நாற்காலிச் சிற்பம் விளக்குகிறது. எங்கு இது உள்ளது என்று தெரியுமோ? பிரித்தானிய நூலகம்!
Photo by N.Kannan

லண்டன் மாலை


லண்டனுக்கோ எத்தனையோ அழகுண்டுதான். அந்த அடுக்கு வீடுகள் நீலத்தை ஒத்திக்கொண்டு...
Photo by N.Kannan

சாயம் கொண்ட பூமி


இப்படிக்கூட நீலம் கொள்ளுமோ பூமி?
Photo by N.Kannan

சிற்பம் இயற்கையுடன் ஒருமையுரும் தருணம்


மாலை எப்போதும் மயக்கக்கூடியது. இயற்கை அழகுடன், மனித சிற்பமும் சேரும் போது அழகு இரட்டிக்கிறது!
Photo by N.Kannan

வைக்கோல் போர் (உருளை!)


குழந்தைப் பருவம் என்றவுடன் வைக்கோல் போரில் உருண்டு, புரண்ட ஞாபகம்தான் உடனே வரும். இந்தியாவில் இன்னும் அப்படித்தான் வைக்கோல் மலையாக நிற்கிறது. ஐரோப்பாவில் அறுவடை முடிந்த கையோடு வைக்கோலை சுருட்டி இப்படி உருளையாக்கி விடுகின்றனர்!
Photo by N.Kannan

மங்கும் போழ்திலும் பொங்கும் அழகு!


பொங்கி விளையும் அழகு ஆல்ப்ஸ் மலைத்தொடர். மாலை மயங்குகிறது. எட்டத்தில் எங்கோ சூரியன் இருக்கிறது. ஒளியை வாங்கிக்கொண்ட மேகம் கடைசி நிமிடத்திலும் ஒரு வண்ண விளையாட்டு விளையாடிவிட்டுப் போகிறது.
Photo by N.Kannan

மலையுடன் பேசும் பொறுமை நமக்குண்டோ?


ஸ்விஸ் முழுவதும் மலைதான். மலையை ரசிக்க பழகிக்கொள்ள வேண்டும். ஒரு பொழுது போல் ஒரு பொழுது இருப்பதில்லை. மலையும், மேகமும் செய்யும் விளையாட்டு குழந்தைகளின் விளையாட்டிற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல!
Photo by N.Kannan

கூடற்சூடு


ஏதோ முன்னமே ஏற்பாடு செய்தது போல் நாங்கள் அந்த பள்ளத்தாக்கில் நிற்கும் போது மேகத்தைத் துளைத்திற்குக்கொண்டு ஒளி வீசியது. மலை உடனே பற்றிக்கொண்டது.
Photo by N.Kannan

மேகம் வாழும் ஊர்


Villars என்றழைக்கப்படும் இடத்திலிருந்து Solalex எனும் பள்ளத்தாக்கிற்கு மாலை உணவிற்குச் சென்றோம். மேகமும் வந்தது கூடவே! அது கூடல் நேரமென்று அப்போதுதான் தெரிந்தது!
Photo by N.Kannan

புல்லின் வெண்மை


மழை பெய்த மறுநாள்!
Photo by Sweta Kannan

மேக வர்ணம்


இயற்கை என்னும் ஓவியனின் தூரிகை செய்யும் மாயை!
Photo by Sweta Kannan

வெள்ளியங்கிரி 2


Mont blonc
Photo by N.Kannan

ஓவியம் போல்


ஓவியம் போல் தென்படும் பள்ளத்தாக்கு, மலைத்தொடர்!
Photo by Sweta Kannan

ஏரிக்காட்சி


பனி உருகி ஏற்படும் ஏரி நீல நிறமாக இருக்கும் (பிற நிறங்களிலும் இருப்பதுண்டு). அதன் அழகு தனி!
Photo by N.Kannan

தொலைத்தொடர்


கோடையில், தெள்ளத்தெளிவான நீல வானில் தென்படும் மலைக் காட்சி மனதை மயக்கக்கூடியது!
Photo by N.Kannan

மலை வண்டி


நினைத்துப்பார்க்க முடியாத இடங்களுக்குக் கூட இரயில் விட்டு சாதனை செய்யும் சுவிஸ். தரை மட்டத்திலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நிற்கும் மலை வளைவில் இரயில் வண்டி!
Photo by N.Kannan

வெள்ளியங்கிரி


Montblonc எனப்படும் வெள்ளியங்கிரி (கோடை 2005)
Photo by Sweta Kannan

ஆ! துவைதம்!!


என் எண்ணம்
this is an audio post - click to play
Photo by N.Kannan

பாலிதீன் படுதா?


என் எண்ணம்
this is an audio post - click to play
Photo by N.Kannan

ஒன்றிணைக்கும் உயிர்கொடி 01


என் எண்ணம்
this is an audio post - click to play
Photo by N.Kannan

ஒன்றிணைக்கும் உயிர்கொடி 02


என் எண்ணம்
this is an audio post - click to play
Photo by N.Kannan

காத்திருத்தல்


மழை பெய்த இரவு. மஞ்சு மூடிய பூமி. கனத்த மழையையும் தாங்கும் சிறு சிலந்தி வலை. கொஞ்சம் கிழிந்தாலும் உட்கார இடமிருக்கிறது. இறை தேடி அது. புகைப்படப் பொருள் தேடி நான். மெல்லிய வெளிச்சத்தை பாய்ச்சி எடுத்தேன். குத்து மதிப்பாக எடுக்க வேண்டியிருந்தது. இரவில் LCD ல் சிலந்தி தெரியவில்லை. வெளிச்சத்தில் பிடிபடும் என்ற நம்பிக்கை. எனக்குக் கிடைத்தது. அதற்கும் கிடைக்கும்.
Photo by N.Kannan

பிம்பம்


தரையில் கிடப்பதால் விளக்கு அழுக்காகிவிடுமா?
Photo by N.Kannan

மழை அமர்ந்த இருக்கை


இன்று காலையில் என் பால்கனி
Photo by N.Kannan

புழக்கடைப்புல்


இன்று காலையில் என் புழக்கடை!
Photo by N.Kannan

A point of view


எல்லாமே நோக்கில் இருக்கிறது! பசுமரம் வேலியாகிறது. வேலியின் பொந்தில் மலர்கிறது வேறொரு காட்சி!
Photo by N.Kannan

பசுமஞ்சள்


கோடையின் அழகே இந்தப் பசுமைதான். பசுமையில் மலரும் பசுமஞ்சள்
Photo by N.Kannan

முள்மலர்


சிலர் இந்த காக்டஸ் போல். முரடாக இருப்பார்கள். ஆனால் நல்ல மலர் கொண்டு இருப்பார்கள். அழகோ அழகு என்று நெருங்கவும் முடியாது!
Photo by N.Kannan

மூலை


இரவில் உறங்கும் வீதியின் மூலை
Photo by N.Kannan

ஒளி


நீரின் ஒளி மந்திரத்தன்மையது!
Photo by N.Kannan

கதவிற்கப்பாலும் காட்சி


வெளி பரந்து எங்கும் நிற்கிறது. கதவு அதை அழகாய் சுட்டுகிறது!
Photo by N.Kannan

கவனம்


கொரிய குடியரசுத்தலைவர் வாழும் இல்லம் மிகவும் கண்காணிக்கப்படும் இல்லம். எப்போதும் ரோந்து!
Photo by N.Kannan

Frame


கதவு, ஜன்னல் போன்றவை இயற்கையான சட்டங்கள்!
Photo by N.Kannan

ஜன்னல்


கொரிய மாளிகையில் ஒரு ஜன்னல்
Photo by N.Kannan

வாசல்


அடுக்கு வாசல்கள் என்றுமே சிந்திக்க வைப்பவை!
Photo by N.Kannan

எழுத்தில் கிளர்ச்சி


உலகம் விசித்திரமானது. ஒரு புறம் விச்சிராந்தையாக ஒருவன் தெருவில் உறங்குகிறான். அருகிலேயே ஒருவன் உலகின் அநீதிக்காக போஸ்டர் போட்டு கிளர்ச்சி செய்கிறான்!
Photo by N.Kannan

தெருச்சுகம்!


தன்னலமற்ற துறவிக்கு தெரு ஒரு பொருட்டில்லை. தன்னிடம் பொருளில்லா கொரியனுக்கும் தெரு ஒரு பொருட்டில்லை போலும்!
Photo by N.Kannan

ஞாயிறு போற்றுதும்!


தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி!
Photo by N.Kannan

காலையா? மாலையா?


இந்த வாரம் அக்னி நட்சத்திரம் ஐரோப்பா முழுவதும். லண்டனில் 32 டிகிரியாம். கொரியாவில் அவ்வளவு சூடு இல்லை. ஆனால் வானில் தெளிவில்லை. பகலா? இல்லை இரவா?
Photo by N.Kannan

வெட்டு ஒட்டு


மழையில் னனைந்தாலும், பீச்சிடும் னீரூற்றில் னனைந்தாலும் குஷி, குஷிதானே! (னொடியில் விட்டுப்போன காட்சியை வெட்டி, ஒட்டியிருக்கிறேன்)
Photo by N.Kannan

மயக்கும் மாலைக் காட்சி


மீண்டுமொரு மயக்கும் மாலை. தொங்யோங், கொரியா.
Photo by N.Kannan