அமெரிக்க பட்டாம்பூச்சி


பட்டாம்பூச்சியைப் படம் பிடிப்பது கடினம். அதுவும் கைக்கேமிரா வைத்துக் கொண்டு கிட்டே போய்!!
Photo by N.Kannan

12 comments:

  தருமி

5:53 pm

கஷ்டம்தான். ஆனாலும் சாதித்துவிட்டாயே!

நல்லா இருக்கு.dha

  Anu

6:00 pm

Nice pic

  Dr.N.Kannan

6:55 pm

தாருமி சார்!

படத்திலே யாரு?

உங்க உறவின் நண்பரொருவரை மெறோபார்க், நியூஜெர்சியில் பார்த்தேன். அவர் பெயர் வெங்கடேசன். மதுரைக்காரர். உங்களைப் பற்றி நினைவுகூர்ந்தோம்.

ஓ! நன்றி :-)

  Anonymous

9:39 pm

அண்ணா!
எனக்கு நல்ல படம் பிடிக்கத் தெரியாது;ஆனால் நல்ல படம் பிடிக்கும். உங்கள் படங்கள் மிக நண்றாக உள்ளன.
யோகன் பாரிஸ்

  Dr.N.Kannan

9:44 pm

யோகன்:

அந்தப் படம் அமெரிக்காவில் ரயில் வண்டி வந்து கிளம்பும் 5 நிமிடத்திற்கு முன் எடுத்தது. பட்டாம்பூச்சி விளையாட்டுக் காட்டிக் கொண்டே இருந்தது. சரி, இதைப் படம் பிடிக்காமல் இன்று ரயிலைப் பிடிப்பதில்லை என்று கூடவே ஓடி இதைப் பிடித்தேன். எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். பிடிக்கமுடியாது என்று எண்ணினர். ஆனால், முடிந்தது!

தாருமி சார், நல்ல புகைப்படக் கலைஞர். அவருக்கே பிடித்துவிட்டது என்றால் பாருங்களேன் :-)

  சேதுக்கரசி

2:15 am

வண்ணமயமான, துல்லியமான, அழகான படம்!

  Dr.N.Kannan

8:53 am

நன்றி, சேதுக்கரசி :-)

  Vassan

11:06 am

பட்டாம்பூச்சி & வண்ணத்துப்பூச்சி இவை இரண்டும் ஒரே பூச்சிகள்தானா...? அல்லது ப.பூச்சி என்பது Moth எனவும் வ.பூச்சி என்பதை Butterfly என்றும் அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டுமா ..?

அமேரிக்கா + வண்ணத்துப்பூச்சி இதை வைத்து நா.முத்துலிங்கம் ஒரு அருமையான சிறுகதை எழுதியிருக்கிறார். ஈழத்திலிருந்து வட கலபோர்ன்யாவின் ரெட்வுட் காடுகளுக்கு வண்ணத்துப்பூச்சியை தேடிவரும் கோணேசுவரன் என்ற வ.பூச்சி ஆராய்ச்சியாளர் பற்றிய கதை. அற்புதமான கதை. அங்கதம் பின்னோடும் முத்துலிங்கத்தின் சிறப்பான நடையுடன் சோகமாய் முடியும். ஞாபகபடுத்தியது நிழற்படம்.

  Dr.N.Kannan

11:48 am

வாங்க வாசன்! வ.பூச்சி=ப.பூச்சி. Moth=அந்துப் பூச்சி.
அ.முத்துலிங்கத்தின் அக்கதை வாசித்ததில்லையே! இணைப்பு இருந்தால் கொடுங்கள்.

  ENNAR

11:59 am

மலரும், பட்டாம் பூச்சியும் நல்லா எடுத்திருக்கிறீர்கள் இருமலர்கள் ஒரு பட்டாம்பூச்சி

  Dr.N.Kannan

12:01 pm

நன்றி என்னார். எப்படி இயற்கையில் வித்தியாசம் தெரியாதவாறு வண்ணச் சேர்க்கை!

  Vassan

2:13 pm

வாங்க வாசன்! வ.பூச்சி=ப.பூச்சி. Moth=அந்துப் பூச்சி.
அ.முத்துலிங்கத்தின் அக்கதை வாசித்ததில்லையே! இணைப்பு இருந்தால் கொடுங்கள்.


ஐயம் தீர்த்தமைக்கு நன்றி கண்ணன். 2 வருடங்களுக்கு முன், பின் கோடை காலத்தில் இங்கு NM ல் Miller Moth அடை அடையாக வந்து ஊர் முழுதும் தொல்லை கொடுத்தது. நீங்கள் போட்டிருக்கும் படத்தில் காணப்படும் பூச்சியிலிருந்து வண்ணத்தை நீக்கி முழுதும் ஒரே நிறமாக இருந்தால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது மில்லர் மோத். அளவும் அதே அளவு.

மன்றமையம் எனும் ஃபோரம்ஹப் ல் 2000 வருட வாக்கில் சிறுகதை பற்றி சிலர் சிலாகித்து பேசிக் கொண்டிருந்த போது, உள் நுழைந்து காப்புரிமை பற்றி கவலைப்படாமல் கோணேசுவரன் கதையை எடுத்து எழுதியிருந்தேன் ! சற்றுமுன் தேடினேன். அகப்படவில்லை.

சென்னை இலக்கியசிந்தனையின் ஒரு வருடத்திய சிறந்த சிறுகதை என தேர்ந்தெடுக்கப்பட கதை. சென்னை போனால் வானதியில் கேட்டுப்பாருங்கள்.