நீர் அழகு!

தீ அழகு!

கடல் அலையின் சுவடு!

நத்தையின் சுவடு

Rural lunch

நம்மவூர் வயக்காட்டில் வேலை செய்துவிட்டு அப்படியே ஏதாவதொரு மேட்டில் அமர்ந்து உண்பதுண்டு. அதுபோல்தான் இங்கும். ஒரு நாள் விவசாயிகளுடன் ஆய்வாளர்கள், அவர்கள் பாணியில்!

On display

குதிரையுடன் நடனம்!

பெரு நாட்டுக் குதிரைகளின் நடையழகு. அவை நாட்டியம் கூட ஆடுகின்றன என்று சொல்லி ஒரு அழகியுடன் நடனமாடவைத்தனர். இந்த அழகியைப் பார்த்தவுடன் நமது நடிகைகள் என் நினைவிற்கு வந்தனர். ஆடிமுடித்த பிறகு என்னிடம் வந்து 'தாங்கள் இந்தியரா?' என்று கேட்டார். ஆமாமென்றேன். தனக்கு பாலிவுட் படங்கள் மிகவும் பிடிக்குமென்றும், இந்திய நடிகைகள் தேர்ந்த நர்த்தகிகளென்றும் பாராட்டிப் பேசினார். தன்னுடன் நடனமாட முடியுமா என்று கேட்டார். சம்பிரதாயமாக இம்மாதிரி அழகியுடன் ஆட ஆடவர்கள் வரிசை போட்டுக் காத்திருப்பர். நமக்கு பாலிவுட் புண்ணியத்தில் அடித்தது 'லக்கி பிரைஸ்'. அந்த நடனத்தை யார் படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. கிடைத்தால் இங்கிடுகிறேன்.


ஆடிப்பாடி வேலை செய்தால்...

பெரு மக்கள் நடனத்தை விரும்புகின்றனர். நமது இசையும் ஆடவைக்கக்கூடியதே! ஆனால் நாம் பொதுவில் நடனமாடக் கூச்சப்படுகிறோம். இக்கூச்சம் போனால் ஆட்டத்திற்கு ஆட்டமாச்சு, உடம்பிற்கும் பயிற்சியாச்சு! இங்கு உங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஆடிக்கொண்டு இருக்கிறார்!

ஓவியமா? படமா?

பைத்தா (பெரு) எனும் நகரில் அமைந்த ஒரு மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையைப் பார்வையிட்ட போது ஓரத்தில் இக்காட்சி கண்பட்டது! இவை பெலிகன் பறவைகள்!

ஆட்டோ ரிக்க்ஷா!

நம்ம ஊரு ஆட்டோ இப்போ உலகமெங்கும் பரவிவிட்டது (அது சரி, அது நம்ம ஊருக்கு எங்கிருந்து வந்தது?). தாய்லாந்தில் இதை "தொக், தொக்" என்கின்றனர். பெரு நாட்டில் "மோட்டோடாக்சி" என்கிறார்கள். இப்போது, தாய்லாந்த் தொழில் நுட்பத்தை வைத்து நெதர்லாந்து முழுவதும் தொக், தொக் வரத்தொடங்கியுள்ளது. Euro 3.50 fixed price!

கல, கலப்பான நாடு

சமீபத்தில் ஆசிய பசிபிக் நாடுகளின் வருடாந்திரக் கூட்டத்தொடரில் கொரியாவின் பிரதிநிதியாக பெரு நாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு எடுத்த படங்களை இங்கு பகிர்ந்து கோள்கிறேன். எங்களுக்கு அளித்த விருந்தில் தினம் பல நடனக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஒரு நாள் மாலை நிகழ்வை இப்புழக்கடை சினிமா காட்டுகிறது (ஆரஞ்சு சட்டையுடன் நடனத்தை ரசிப்பது நான்)