Posted by
Dr.N.Kannan
29.12.06
at
Friday, December 29, 2006
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikOp-Albr9ti8W_OJYdkJ2gUtMsxPV8J2R50O3pFrDQiX0RhDbQdzJd2PuGpZxJbO74-wKrhhf-ZqLt3cST7oxc6etZJTgILgv1QqBpKzEjCELYPzEJ1dDraEPVPizEHZLeexneg/s400/Kindoor.jpg)
கோயில் வாயில் என்பது புகைப்பட அழகுள்ளது. இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்றாலும் இது ஏற்றுக் கொள்ளக்கூடிய படமே. என்னை கிறிஸ்துமஸ் அன்று படமெடுத்தவர் குண்டூரி கிஷோர்குமார்.
Posted by
Dr.N.Kannan
at
Friday, December 29, 2006
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN05fcIzl2j7WMhx6Rc5Q5nd8mxmU-SozW40_Mo-S6QAuIqf-9hFBHLt_t5Z1tr0Af3PkytgeWnXkc53-JdqXYq20-wtkxPcf3jg1OKQF_VZENFBIvbJEC3-TrlNJKBcB8N_ZMlw/s400/three+legs.jpg)
புகைப்படத்தில் கோணம் என்பதே பிரதானம்! நன்றாகப் பாருங்கள் இன்னொருமுறை! (இதுவும் சுட்ட படமே ;-)
Posted by
Dr.N.Kannan
27.12.06
at
Wednesday, December 27, 2006
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGI63mJHDdvljAMCizqT7hQysFeJQ9zfraPyUNJew7-z0bNrpTDiLuTL9C_wFJVkS3w7KVJZOiC8_JxPUmh3jZbF2WEpeEA8TDfrl8Yk9GYLzDqFG_LO35_btJOO3gl3YI51jmoQ/s400/headleg.jpg)
இது சுட்ட படம்தான். ஆனால் இப்படி நான் எடுக்க விரும்பும் படம்!
Posted by
Dr.N.Kannan
7.11.06
at
Tuesday, November 07, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/naught.jpg)
கல்லும் ஓடுமோ? கயிறு கட்டி நிறுத்தி வைக்க?
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
5.11.06
at
Sunday, November 05, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSC_5128.jpg)
Prof.Gil Jacinto
Higher Apes என்று சொல்லக்கூடிய உயிரினங்களில் Social grooming மிக முக்கியம். தலை வாரி பூச்சூடல், பேண் பார்த்தல் போன்றவை இதிலடங்கும். இப்படி இயல்பான படமெடுக்க எனக்கு ரொம்ப ஆசை. நண்பர் ஹசிந்தோ அவர்கள் Nikon zoom lence வைத்து இதை எடுத்தார். எவ்வளவு இயல்பாக இருக்கிறது!
Posted by
Dr.N.Kannan
8.10.06
at
Sunday, October 08, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5722.jpg)
மலையேற்றம் என்பது ஆரோக்கியமானது. உயரத்தில் இருக்கும் போதுதான் தெரியும் கடந்து வந்த தூரமும், பாதைகளின் சிக்கலும்! உயரத்தில் இருப்பது எளிதானதல்ல. ஆபத்தானது. இருப்பை தக்க வைக்க விழிப்புடன் இருக்க வேண்டும்!
Posted by
Dr.N.Kannan
at
Sunday, October 08, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5720.jpg)
இந்தியாவில் மலைகள் எப்போதும் பச்சையாக இருக்கும். ஆனால் கொரியாவில் அவை மாறும்!
Posted by
Dr.N.Kannan
at
Sunday, October 08, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5711.jpg)
புத்தனின் தியான நிலையை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை!
Posted by
Dr.N.Kannan
at
Sunday, October 08, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5735.jpg)
ஆசிய நாடுகளில் பல புத்த சமயத்தைத் தழுவின. ஆன்மீக நிலையில் உயர்ந்தலைக் குறிக்கும் பகோடா ஒரு புத்த குறியீடு. இதை எளிய வழியில் காட்டும் வகையில் கல்லை அடுக்கி வைக்கிறார்கள் இங்கு. இப்போது இது திருமலைக்கும் வந்துவிட்டது என்று கேள்வி!
Posted by
Dr.N.Kannan
at
Sunday, October 08, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5706.jpg)
கொரியாவிலுள்ள ஒரு பழைய பகோடா
Posted by
Dr.N.Kannan
31.8.06
at
Thursday, August 31, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5636.jpg)
மணிலாவின் தெருக்களில் ஊரும் ஜீப்னி. 20-25 பேர்கள் செல்லக்கூடிய வாகனம். மூன்றாம் உலக நாடுகளின் இத்தகைய தேவையான கண்டுபிடிப்புகளுக்கு அறிவியல்-தொழில்நுட்பம் உதவினால் செலவற்ற போக்குவரத்து வசதி செய்யமுடியும். மணிலாவில் மீட்டர் உண்டு. யாரும், யாரையும் ஏமாற்றுவதில்லை!
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
14.8.06
at
Monday, August 14, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5547.jpg)
பட்டாம்பூச்சியைப் படம் பிடிப்பது கடினம். அதுவும் கைக்கேமிரா வைத்துக் கொண்டு கிட்டே போய்!!
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
12.8.06
at
Saturday, August 12, 2006
Posted by
Dr.N.Kannan
at
Saturday, August 12, 2006
Posted by
Dr.N.Kannan
8.8.06
at
Tuesday, August 08, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5519.jpg)
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்,
கொம்பேறித்தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!
(ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில். பாலூட்டிகளின் தோற்றம் எனும் ஆவணப்படம் பார்க்கும் சிறுவர்கள்)
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
at
Tuesday, August 08, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5585.jpg)
நியுயார்க் வால் ஸ்டிரீட் (Wall Street) போயிருந்தபோது நமது தேசியக்கொடி அமெரிக்க கொடியுடன் பறந்து கொண்டு இருந்தது? என்ன விசேஷம்? இந்தியாவை மெல்ல, மெல்ல உலகம் அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டதின் அறிகுறியா?
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
at
Tuesday, August 08, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5592.jpg)
அமெரிக்க நாய்குடையும் அதே அழகில்!
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
18.7.06
at
Tuesday, July 18, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/taylor-2.jpg)
ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்னும் இழி சொல்லைத் தூரத்தள்ளும் தெருவோரத் தையற்காரர்!
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
at
Tuesday, July 18, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/taylor.jpg)
அமெரிக்காவின் பேஷன் நகரமான நியூயார்க்கில் ஒரு தையற்காரருக்கு ஞாபகார்த்தம் வைத்திருப்பது சாலச் சிறந்ததே!
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
at
Tuesday, July 18, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/school%20kids.jpg)
பள்ளிகளை விட பள்ளிக் குழந்தைகளே உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன!
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
8.7.06
at
Saturday, July 08, 2006
மணிக்கு 500 கிமீ வேகத்தை எட்டும் ரயில். ஜெர்மானிய தொழில்நுட்பத்துடன் ஷங்காய் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் சீனாவின் முன்னேற்றக்குறியீடு!
Posted by
Dr.N.Kannan
7.7.06
at
Friday, July 07, 2006
Posted by
Dr.N.Kannan
21.6.06
at
Wednesday, June 21, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5390.jpg)
கோலாக் கரடி, கரடியே இல்லை :-) எவ்வளவு அன்பு பாருங்கள். ஒரு முறை பெர்லின் விலங்காட்சியகத்தில் ஒரு சிம்பான்சி என்னை முத்தமிட்டுவிட்டது. அதுவொரு பெண் குரங்கு. ஆக, காதலுக்கு கண்ணில்லை :-))
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
20.6.06
at
Tuesday, June 20, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/PICT0007.jpg)
ஈருடல் ஓருயிர் என்று கவித்துவமாக நாம் பேசுவதுண்டு. ஆனால், ஆஸ்திரேலிய நீலமலையில் இரண்டு வெவ்வேறு இன மரங்கள் தற்செயலாக ஒன்றுடன் ஒட்டி உறவாட, பின் பிரியமுடியாதபடி இரு உடல் ஒரு உயிர் என்று கலந்துவிட்ட காட்சி.
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
at
Tuesday, June 20, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/PICT0010.0.jpg)
இதைப்பார்த்தவுடன் சோளப்பயிர்தானே ஞாபகத்திற்கு வருகிறது. கூர்ந்து பாருங்கள் இயற்கையின் விந்தையை! இது கூம்பு மரம். ஆஸ்திரேலிய 'கடம்ப வனத்திலுள்ளது'. இயற்கை பல நேரங்களில் ஒரே template வைத்துக்கொண்டு பல இடங்களில் பதிப்பிப்பதுண்டு.
Posted by
Dr.N.Kannan
10.6.06
at
Saturday, June 10, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/PICT0020.0.jpg)
சோல் நகரத்து வணிகர்கள் 'பிரா' (மாராப்பு) விற்கும் திறன்!! (என்ன இது வெறும் ஆண்களுக்கான போட்டாவா போச்சு :-)
Posted by
Dr.N.Kannan
at
Saturday, June 10, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/PICT0022.jpg)
இங்கிலாந்து கோட்டையில் மட்டுமில்லை, கொரியக்கோட்டைகளிலும் சிப்பாய் சிரிப்பதில்லை! ஹி..ஹி..
Posted by
Dr.N.Kannan
at
Saturday, June 10, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/PICT0017.jpg)
அனுமதிக்கப்பட்ட ஆண்களுக்கான சுகங்களில் ஒண்ணுக்கடித்தலும் ஒன்று. ஏறக்குறைய 800மீ உயரத்திலிருந்து, சோல் கோபுரத்திலிருந்து...ஹி..ஹி..
Posted by
Dr.N.Kannan
30.4.06
at
Sunday, April 30, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/I-Shanghai024.jpg)
சமீபத்தில் ஷங்காய் சென்றிருந்தபோது ஃபுதோன் பல்கலைக்க்ழக அருங்காட்சியகத்தில் இப்படத்தைப் பார்த்தேன். நம்ம ஆளு மாதிரியே சீனாவில் ஒருத்தர் இருப்பது தெரிந்தது!
When did Narasimha Rao meet Chairman Mao?
Posted by
Dr.N.Kannan
9.4.06
at
Sunday, April 09, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5295.jpg)
இளவேனில் எனில் பூத்துவிடவேண்டும். கிளை முறிந்து உயிர் போகும் நிலையிலும்! வாழ்க!!
Posted by
Dr.N.Kannan
at
Sunday, April 09, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/flowerdust.jpg)
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
at
Sunday, April 09, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5298.jpg)
இன்று மாலையில் பறித்தது, மன்னிக்க பிடித்தது, உயிருடன் உங்களுக்கு!
Posted by
Dr.N.Kannan
30.3.06
at
Thursday, March 30, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/Koje013.jpg)
பனிக்காலத்தின் எதிர்பார்ப்பே, இந்த இளவேனில்தான். பட்டுப்போன மரங்கள் (தோற்றப்பிழை) தளிர்க்க ஆரம்பிக்கும். இலைக்கு முன்னே மலர் வந்துவிடும்!
மேலும் சில படங்களை எனது மற்றொரு தொகையில் (ஆல்பத்தில்) காணலாம். இளவேனில் சுற்றுலா சென்றபோது நானும், ஒரு சகாவும் எடுத்தவை அங்குண்டு.
Posted by
Dr.N.Kannan
26.3.06
at
Sunday, March 26, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/Koje014.jpg)
கலாச்சாரங்கள் கை கோர்க்கும் போது சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது இப்படியானதொரு விபத்து. இப்போது உலகெங்கும் இது பரவிவிட்டது. ஆனால் 'தொட்டில் பழக்கம்' என்று சில பழக்கங்கள் நாட்டுக்கு நாடு இருக்கின்றன. நாம் கையால் சாப்பிடுவது, கிழக்காசியாவில் குச்சி கொண்டு சாப்பிடுவது இப்படி. கொரியாவில் கேக்கை இப்படிக் குத்திக்கொதறி சாப்பிடுவது, ஜெர்மனியில் வாழ்ந்துவிட்ட எனக்கு பரிதாபமாகப்படும்! முதன் முதலாக வெள்ளைக்காரர் சாப்பாட்டு வழக்கம் கொரியா வந்து போது கொரியக்கிழங்கள் 'இது என்ன ஆயுதங்களை வைத்துச் சாப்பிடுவது?' என்று அங்காலாய்த்தார்களாம்! சரிதானே!!
Posted by
Dr.N.Kannan
14.3.06
at
Tuesday, March 14, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/DSCN5281.jpg)
அது சரி! ஒண்ணுக்குப்போற இடத்திலே 'நாகரீகத்தை நோக்கி வெற்றி நடை போடுவோம்' என்ற வீர வசனம் எதற்கு? சிந்தாவ் எனும் சீன நகரில் ஒரு மெகாமாலில் எடுத்தது.
Posted by
Dr.N.Kannan
13.2.06
at
Monday, February 13, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/PICT0016.0.jpg)
சித்திரா பௌர்ணமியன்று கள்ளழகர் மதுரை ஆற்றில் இறங்குவார். குழந்தையாய் இருக்கும் போது அது ஒரு குதுகூல நிகழ்வு. பௌணர்மி எல்லா கலாச்சாரங்களிலும் முக்கியமானதே! இந்த சந்திர ஆண்டு பிறந்த விழாக்கள் பிப்ரவர் 12 அன்று முடிவடைந்தன. அது சமயம் நம்ம ஊரில் கொளுத்தும் சொக்கப்பான் போலவே இங்கும் ஏற்றுகிறார்கள். பழையன கழிந்து புதியன பிறக்க வேண்டும் சைகை போலும். மேல் விவரங்களை பிற வலைப்பதிவுகளில் தருகிறேன்.
Photo by நா.கண்ணன்
Posted by
Dr.N.Kannan
6.2.06
at
Monday, February 06, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/snoWork-008.jpg)
Art of snow! காலையின் கதவைத் திறந்தால் கலையின் காட்சி! எப்போதாவதுதான் இங்கு பனி பெய்கிறது. அன்று கல்யாணப்பெண் போல் நிலமகள் தன்னை வசீகரித்துக்கொள்கிறாள்! மற்ற படங்களையும் காண...
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
31.1.06
at
Tuesday, January 31, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/Korea%202006%20.jpg)
இரவில் பூசான் கடற்கரை
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
10.1.06
at
Tuesday, January 10, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/tamnew.jpg)
Happy New Year!
பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்!! கலியும் கெடும்!!
என்று நல்வாழ்த்துக்கூறுவார் நம்மாழ்வார். எப்படியோ, blogger.comக்குள் நுழைவதற்காக இருந்த தடை இப்போது இங்கு நீங்கிவிட்டது. தொடர்ந்து பங்கு பெறலாம். எந்தை சடகோபனுடன் இணைந்து உங்களை வாழ்த்துவதில் மகிழ்வு கொள்கிறேன்.
Photo by N.Kannan
Posted by
Dr.N.Kannan
at
Tuesday, January 10, 2006
![](http://photos1.blogger.com/hello/134/980/400/boatonland.jpg)
இக்காட்சி கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. நீர் இறங்கிவிட்டால் படகு தரை தட்டிக் கிடப்பது வெடிக்கைதான். மூச்சு இருக்கும் வரைதான் ஆட்டம் பாட்டமெல்லாம் என்பது நினைவிற்கு வரவில்லை?
Photo by N.Kannan